சுமார் 40,000 முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி, 160 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணத்தை ஏமாற்றிய தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அந்தநாட்டு நீதிமன்றம் 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் அந்த தண்டனை பாதியாகக் (6,637 ஆண்டுகள், 6 மாதங்கள்) குறைக்கப்பட்டுள்ளது.