நிலையான லாப வளர்ச்சியில் எல்&டி ஃபைனான்ஸ்
இருப்பு நிலை மற்றும் வருமான விகிதங்களை மேம்படுத்துவது மூலம் சொத்தின் தரத்தில் இந்த நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியதால், அதன் பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் (L&T Finance Holdings) –ன் பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், அதன் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்குமான விகிதம் (P/B) ஓராண்டு காலத்தில் 2.2 - லிருந்து 3.4 ஆக அதிகரித்துள்ளது. இந்த அளவுக்கு அதிகமாக அதிகரித்திருப்பதற்கு எம்எஸ்சிஐ இந்தியா டொமெஸ்டிக் இண்டெக்ஸ்-ல் (MSCI India Domestic Index) இந்த நிறுவனப் பங்கு அண்மையில் சேர்க்கப்பட்டதும் முக்கிய காரணமாகும்.
இந்த நிறுவனத்தின் தற்போதையை மதிப்பீடு தொடர்ந்து நிலை பெற, இருப்பு நிலை (balance sheet) மற்றும் வருமான விகிதங்களை (return ratios) மேம்படுத்துவது மூலம் சொத்தின் தரத்தில் இந்த நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகும். ஆறு காலாண்டுகளுக்கு மேலாக கட்டுமானக் கருவிகள், தங்கம், கன ரகம் மற்றும் இலகு ரக வாகனங்கள் கடன் பிரிவு இழப்பில் சென்று கொண்டிருந்தன.
இந்த நிலையில், இந்தக் பிரிவில் கவனம் குறைக்கப்பட்டு, கடன் வழங்குது குறைந்ததை அடுத்து இழப்பு குறைந்தது. 2016 மார்ச் காலாண்டில் இந்தப் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட கடன் ரூ. 4,931 கோடியாக இருந்தது. அது 2017 செப்டம்பர் காலாண்டில் ரூ. 2,005 கோடியாக குறைந்துள்ளது.
அதேநேரத்தில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட பிரிவுகளில் வழங்கப்பட்ட கடன் 32 சதவிகிதம் அதிகரித்து ரூ. 70,343 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பிரிவின் கீழ் கிராமப் புறக்கடன்கள், வீட்டு வசதிக் கடன்கள் வருகின்றன. முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை நிறுவனத்தின் இதர முக்கியத்துவம் பெற்ற பிரிவுகளாகும். லாபம் தரும் வணிகத்தில் அதிக கவனம் செலுத்தியதால், நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் மேம்பட்டிருக்கிறது. செலவு - வருமான விகிதம் (cost-income ratio) ஓராண்டுக்கு முன் 28.3% ஆக இருந்தது. அது செப்டம்பர் காலாண்டில் 22.9% ஆக குறைந்தது.
கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட வணிகத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 39% அதிகரித்து ரூ.375 கோடியாக அதிகரித்துள்ளது. கட்டண வருமானம் இரண்டரை மடங்கு, நிகர வட்டி வருமானம் 16% அதிகரித்ததால் இது சாத்தியமாகி உள்ளது. அதேநேரத்தில், அதிக கவனம் செலுத்தப்படாத வணிகங்களின் மூலமான இழப்பு ரூ. 35 கோடியிலிருந்து ரூ. 29 கோடியாக குறைந்துள்ளது. மொத்த நிகர லாபம் 45% அதிகரித்து ரூ. 360 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனம், அதன் பேலன்ஸ் ஷீட்-ஐ வலிமையாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் காலாண்டில் வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, ஒதுக்கீடு கவரேஜ் விகிதம் 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து பங்கு மூலதனம் மீதான வருமானம், செப்டம்பர் காலாண்டில் 3.43 சதவிகிதம் அதிகரித்து 15.2% ஆக உயர்ந்துள்ளது. இது, 2020 ம் ஆண்டில் 18% ஆக அதிகரிக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
நிறுவனத்தின் மதிப்பீடு, கடந்த 12 மாதத்தில் 1 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. வரும் காலாண்டுகளிலும் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும் எனலாம்.