BITCOIN பிட்காய்னில் முதலீடு செய்திருக்கிறீர்களா?
Adventures with #BITCOIN
திரு. அதிஷா விணோ முகநூல் பதிவிலிருந்து
இரண்டு நாட்களாக இருபதுக்கும் அதிகமான நண்பர்கள் ``பிட்காய்னில் இன்வெஸ்ட் பண்ணனும்'' என துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் மீடியா ஹைப், பத்தாண்டுகளுக்கு முன்பு 600 ரூபாய் போட்டிருந்தால் இப்போது அதன் மதிப்பு 5,000 கோடி பத்தாயிரம் கோடி என செய்திகளாய் உட்டால் யாருக்குத்தான் மனசு துடிக்காது.
கொஞ்சம் கூட மெனக்கெடாமல் உட்கார்ந்த இடத்தில் டபிள், ட்ரிபிள், க்வாட்ரபிள், பிம்பிளிக்கி பிலாப்பி என பூச்சாண்டி காட்டினால் எல்லோருக்குமே நாவு மொட்டுகள் நடனமாடத்தானே செய்யும்!
நேற்று (2017, டிசம்பர் 1) மட்டுமே பல கோடிபேர் பிட்காய்னுக்குள் புதிதாக என்ட்ரியிருக்கிறார்கள். இந்த புதிய பிட்காய்ன் முதலீட்டாளர்கள் அத்தனை பேரிடமும் இருக்கிற ஒரே ஒற்றுமை Greed!
சதுரங்கவேட்டை காந்திபாபுக்களுக்கு இது பொன்னான தருணம். ஒரு சுமோவில் நாலு கம்ப்யூட்டரையும் இரண்டு லாப்டாப்பையும் அள்ளிப்போட்டுக்கொண்டு பிட்காய்ன் மைனிங் பண்றோம், ஒரு லட்சம் கொடுத்தா ஒரே வருஷத்துல பத்து கோடி ஆக்கிடலாம் என்று கிளம்பினால் போட்ட டீசல் காலி ஆவதற்கு முன் மினிமம் முப்பது கோடியுடன் ஊர் திரும்பலாம்!
நன்றாக படித்தவர்கள், ஐடிகம்பெனி அன்பர்கள், விக்கிபீடியா வித்தகர்களைக்கூட எளியவழியில் சுலபமாக ஏமாற்றலாம்!
காரணம் கூகிள் முழுக்க இத்தகைய வெற்றிக்கதைகள் நிறைய கிடைகிறது. பிட்காய்ன் மைனிங் பற்றியெல்லாம் புரிந்துகொள்வதற்கு முன்னால் காசைவாங்கிக்கொண்டு உங்க பிட்காய்ன் சர்டிபிகேட் இதுதான் என QR Code ஒன்றைக்காட்டிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம்!
(இந்த ஐடியாவுக்கு காப்பி ரைட்ஸ் என்னுடையது. யாராவது முயற்சித்தால் நிச்சயம் ராயல்டி கொடுத்துவிடவும்! இதுமாதிரி மேலும் பலவித ஐடியாக்கள் கைவசம் இருக்கிறது. மொத்தமாகவும் சில்லறையாகவும் இவ்விடம் கிடைக்கும். )
நேற்று ஒருமணிநேரத்தில் மட்டும் பிட்காயினின் மதிப்பு பத்து சதவீதம் ஏறியிருக்கிறது. இந்த ஒரே ஆண்டில் மட்டும் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு எகிறி இருக்கிறது. (ஜனவரியில் ஒரு பிட்காய்ன் மதிப்பு 1,000 டாலர் இப்போது 11,000 டாலர்!)
பல ஆண்டுகளாகவே இந்த பிட்காய்ன் பிசாசு உலகம் சுற்றிக்கொண்டிருந்தாலும், இந்த ஆண்டுதான் அது பரவலாக பேசப்பட்டது. காரணம் யாருமே நினைத்துப்பார்க்க முடியாத குபுகுபு வளர்ச்சி. ஏராளமான கோடீஸ்வரர்களை உருவாக்கிவிட்டது.
கோடிக்கணக்கில் முதலீட்டாளர்களை உள்ளே ஈர்த்தது. அமெரிக்க வங்கிகளுக்கே சவால் விட்டு வளர்ந்தது, மைக்ரோசாப்ட் தொடங்கி பல முன்னணி நிறுவனங்களும் கூட பிட்காய்ன் பரிவர்த்தனைகளுக்கு ஓகே சொன்னது என எல்லாமே ஹேப்பி ஹேப்பி தான்!
எதிர்காலத்தில் கத்திரிகாய் முதல் கார் வரை எல்லாமே பிட்காய்ன் மூலம் வாங்கமுடியும் என ஒரு ஆதரவு குழுவினர் பாட்டுபாட, ஆதிகாலத்து எகனாமிக்ஸ் புலிகள் அத்தனை பேரும் இது ஒரு ஆபத்தான பூச்சாண்டி உங்களை சூறையாடிவிடும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து என எசப்பாட்டு படிக்க... காமன்மேன்களோ ஈஸி மணி ஆசையில் பிட்காய்ன் ப்ரியர்களாக மாறத்தொடங்கிவிட்டனர்.
பிட்காய்னில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஊருக்குள் இருக்கிற அத்தனை மோசக்காரர்களும் வாழ்கிற ரத்தபூமிதான் இந்த பிட்காய்ன் க்ரிப்டோ கரண்ஸியின் பூர்வீகம். ஊழல்வாதிகள், மாபியா கும்பல்கள், போதைமருந்து கடத்தல்காரர்கள், ஆயுதபேரம் பண்ணுகிறவர்கள், தீவிரவாதிகள், சூதாடிகள், என பிட்காய்னில் புளங்குகிற ஆட்கள் பூராவும் உத்தம புத்திரர்கள்தான். ஏன் அப்படி? இந்த பிட்காய்னை எந்த நாடும் எந்த நாட்டு அமைப்பும் கட்டுப்படுத்துவதில்லை. கண்காணிப்பதில்லை. சட்டதிட்டங்கள் கிடையாது. கட்டற்ற சுதந்திரம்தான் பிட்காய்னின் பலமும் பலவீனமும்.
நான்கு மாதங்களுக்கு முன்பு பிட்காய்ன் மதிப்பு நாலாயிரம் டாலரை எட்டியபோதுதான் அதுகுறித்த செய்திகளை முதன்முதலில் வாசிக்கத்தொடங்கினேன். அதன் சூட்சமங்கள் சுத்தமாக புரியவில்லை. கூகிள் பண்ணிபண்ணி முயற்சிசெய்தும் அடிப்படைகளை தாண்டமுடியவில்லை.
கிரிப்டோ கரண்ஸி, ப்ளாக்செயின், சடோஷி நாகமுட்டா, மைனிங்... ப்ளாப்ளாவையே பலவிதங்களில் படிக்க முடிந்தது.
உடனே ஒரு ஏழாயிரம் ரூபாயை தலையை சுத்தி மந்திரம் சொல்லி நாலு துப்பு துப்பி இது போச்சு போச்சு போச்சு இனிமே திரும்பி வராது என சொல்லி பிட்காய்னில் முதலீடு செய்தேன். நான் கொடுத்த நாலாயிரத்திற்கு 0.021 அளவுக்கு பிட்காய்ன் கொடுத்தார்கள்!
நம்ம காசு உள்ளே நுழைந்ததும் என்ன மாயமோ மந்திரமோ தானாகவே பனித்திரைகள் விலகி பிட்காய்ன் மர்மங்கள் புரியத்தொடங்கின! நம்ம காசாச்சே!
(பிட்காய்ன் மட்டும் அல்ல அதுபோலவே ரிப்பிள், ஈத்தரம்,லைட்காய்ன், பீர்காய்ன், லொட்டு லொசுக்கு என ஆயிரம் வகை இருக்கிறார்கள். உள்ளதிலேயே பிட்காய்ன்தான் பாப்புலர், நெக்ஸ்ட்டு ஈத்தரம்.) இதுபோக இப்போது ஐசிஓ என்கிற பெயரில் Ico - Initial coin offering என புதுவகையில் காசு திரட்டுகிறார்கள். இந்தப்பாதைகள் எங்குபோய் முடியும் என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது. காசுபோட்டவர்கள் லாபம் சம்பாதித்தால் மகிழலாம்.
பிட்காய்னை இன்றைய தலைமுறையின் தங்கம் என்று உலகம் அழைக்கிறது. காதல் தொடங்கி கழட்டிவிடுவது வரை சகலத்தை விர்ச்சுவலாகவே செய்து பழக்கப்பட்ட தலைமுறைக்கு முதலீடும் கூட விர்ச்சுவலா இருந்தால்தான் பிடிக்கிறது.
ஆனால், தங்கத்தை உங்களால் பார்க்க முடியும், வீட்டில் வைத்துக்கொள்ள முடியும், ஆனால் இந்த கிரிப்டோ கரண்ஸியை லேப்டாப்பில், மொபைலில் கூட பார்க்க முடியாது. கடவுள் மாதிரி கண்ணுக்குத்தெரியாது! அரூபமான கரண்ஸியை நம்ம ஊர் மதிப்புக்கு மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போதைக்கு ஒரு பிட்காய்னின் மதிப்பு ஆறுலட்சம்!
பிட்காய்னில் இன்வெஸ்ட் பண்ணலாமா வேண்டாமா?
அதுக்கு முதலில் துலிப்மேனியா பற்றித் தெரிஞ்சிக்கணும்.. பெரிய ட்விஸ்ட்டுகள் கொண்ட நானூறு பக்கக் கதையை சிம்பிளாக ஒருபக்கத்தில் சொல்கிறேன். நம்ம ஊர் ஈமுக்கோழி கதைதான் கொஞ்சம் வேறமாதிரி.
16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் முதன்முதலாக துலிப் மலர்கள் துருக்கியிலிருந்து டச்சுக்கு வந்தது. டச்சுக்காரர்களுக்கு துலிப் மலர்கள் மீது பித்து பிடித்துவிட்டது. அதன் வாசனையில் மயங்கிவிட்டனர்.
நம்ம ஊர் மல்லிகைப்பூ முருங்கைப்பூ மாதிரியோ என்னவோ! துலிப் மலர்களுக்கான மார்க்கெட் சூடு பிடிக்க ஆளாளுக்கு துலிப் மலர்கள் உற்பத்தியில் இறங்கிவிட்டனர். துலிப் விதைகளை Bulb என்கிறார்கள்.
இந்த பல்பில் ஆளாளுக்கு முதலீடு செய்யத்தொடங்கினர். முதலீட்டாரளர்கள் அதிகம் ஆக ஆக... துலிப் பல்ப்களின் விலை தாறுமாறாக ஏறத்தொடங்கியது. இப்படியே ஏறினால் ஒரு துலிப் மலரின் விலை ஒரு ஊரையே விற்றாலும் கூட கட்டுப்படியாகாது என்கிற அளவுக்கு உயரத்தொடங்கியது. தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று துலிப் பல்ப்களை டச்சு மக்கள் வாங்கத்தொடங்கினர்.
ஆனால், உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அதுலிப் மலர்களுக்கான சந்தை சரிய மூளைக்கார முதலீட்டாளர்கள் துலிப் பல்ப்களை அவசரமாக விற்கத்தொடங்கினர்... நிறைய பேர் விற்க விற்க துலிப் பல்ப்களின் விலை சரிய சரிய... ஊதிப்பெருக்கப்பட்ட ஒரு சந்தை பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. பல ஆயிரம் பேர் நடுத்தெருவுக்கு வந்தனர்! இதைதான் வரலாற்றில் துலிப்மேனியா என்று அழைக்கிறார்.
எகனாமிக் பபுள் பற்றிப்பேசும் போதெல்லாம் இந்த துலிப்மேனியா பற்றியும் பேசுவார்கள்!
(ஊதிப்பெருக்கப்பட்ட சந்தை. எந்த நேரத்திலும் வெடித்து சிதறி பெரிய நஷ்டத்தை உருவாக்கிவிடக்கூடியது, அந்தச் சூழலை எகானமிக் பபுள் என்கிறோம்)
பிட்காய்ன் கூட துலிப்மேனியாவைப்போல எகனாமிக் பபுள்தான் என்கிறார்கள்! இருக்கலாம். அது வெடித்துவிடும் என்கிறார்கள். இருக்கலாம். பிட்காய்னின் தீமைகளை எண்ணி சீனா ஏற்கனவே அதன் வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளது. ஆனால் இந்தியாவில் தடையெல்லாம் இல்லை. யாரும் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
ஆனால், பணம் போனால் யாரிடமும் போய் புகார் செய்ய முடியாது. ரிசர்வ் பேங்க் கண்காக்கிறது என்கிறார்கள். அவ்வளவுதான். அமெரிக்கா சீக்கிரமே ஆப்பு வைக்கும் என்கிறார்கள். இருக்கட்டுமே! பிட்காய்ன்களை நேரடியாக வாங்கினாலும் விற்பதாக இருந்தாலும் எக்சேஞ்ச்கள் வழிதான் செய்யவேண்டும்.
ஆனால், உலக அளவில் இதுவரை எக்ஸ்சேஞ்ச்கள் வாரி லவட்டிய தொகையே ஐம்பதாயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள்! ஏமாந்தால் யாரிடமும் புகார் கொடுக்க முடியாது. நாளைக்கே காலையில் மோடி பிட்காய்னை வெளியேற்றுவோம் எனக்கிளம்பினால் போட்டபணமெல்லாம் பரந்தாமனுக்கே என்று இருந்துவிடவேண்டியதுதான்!
இதற்கெல்லாம் மேல் பிட்காய்னில் முதலீடு செய்ய இது சரியான தருணம் அல்ல! மக்கள் பதட்டத்தில் விற்கும்போது நாம் முதலீடு செய்யவேண்டும், மக்கள் பேராசையில் வாங்கி வாங்கிக் குவிக்கும்போது நாம் விற்கவேண்டும் என்பதுதான் முதலீட்டாளர்களுக்கான முத்தான போதனை! இதைதான் வாரன்பபெட்டில் தொடங்கி நம்மூர் ஜூன்ஜூன்வாலா வரை போதிக்கிறார்கள்!
பிட்காய்னுக்கும் அதே மந்த்ராதான். காரணம் பிட்காய்ன் இப்போது மிகக்குறுகிய காலத்தில் தாறுமாறாக விலையேறி இருக்கிறது.
பழைய முதலீட்டாளர்கள் இதை பயன்படுத்தி விற்று லாபம் பார்க்கத்தொடங்கி இருக்கிறார்கள். விலை மேலும் சரியும். இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இரண்டாயிரம் டாலர் விழுந்திருக்கிறது!
எப்படியும் ஆறாயிரம் டாலர்களுக்கு கீழே கூட போகும். அதாவது இன்றைய விலையில் பாதி! சொல்லமுடியாது நாலாயிரத்தைக்கூட எட்டலாம்! எனவே பொறுமை முக்கியம்! காத்திருங்கள்.
விலை குறையாவிட்டால் எதையும் நீங்கள் இழந்துவிடவில்லை. அந்த வண்டி அங்கேதான் இருக்கப்போகிறது.
பிட்காய்ன் விலையை தினமும் கவனித்து இறங்கும்போது காசு போட்டு வைக்கலாம். கடன்வாங்கி காசுபோடக்கூடாது. அவசரத்திற்கு வைத்திருக்கும் சேமிப்பை போடவேண்டாம். மிச்சசொச்சத்தை ஆடம்பர அமவ்ன்ட்களைப் போட்டுவைக்கலாம். பிற்காலத்தில் லம்பாகவும் கிடைக்கலாம், மொத்தமாகவும போகலாம், ஆனால் எதற்குமே கியாரண்டி கிடையாது. பணம் பத்திரமாக இருக்கவேண்டும் என நினைக்கிறவர்களுக்கும் இதயசிறுநீரக பலஹீனர்களுக்கும் பிக்ஸட் டெபாசிட் இருக்கிறது... பிட்காய்ன் வேண்டவே வேண்டாம். because this is game of death, not for children and faint hearted
சரி... பிட்காய்ன் பற்றி கற்றுக்கொள்ள நான் போட்ட ஏழாயிரம் என்னாச்சு தெரியுமா? முதல் மாதத்திலேயே அதன் மதிப்பு பாதியாகக் குறைந்தது. ஆனால் அது என்னதான் ஆகிறது என பார்த்துகொண்டிருந்தேன். இதோ இரண்டு நாட்களுக்கு முன்பு அதன் மதிப்பு கிட்டதட்ட இருபதாயிரம். அதிலிருந்து என் முதலீடான ஏழாயிரத்தை மட்டும் வெளியே எடுத்துவிட்டேன். மீதித்தொகை உள்ளேதான் கிடக்கிறது! அது என்ன ஆனாலும் இப்போதைக்கு கவலையில்லை! ஒரு இருபது வருஷம் கழிச்சு பாத்துக்கலாம்!
திரு. அதிஷா விணோ (Athisha Vino)
https://www.facebook.com/athisha1 , dhoniv@gmail.com, https://twitter.com/athisha

திரு. அதிஷா விணோ |