நாணயம் விகடன் முதலீடு, வணிக திருவிழா, கண்காட்சி 16, 17 - 2017
நாணயம் விகடன் சார்பாக முதலீடு, வணிக திருவிழா, கண்காட்சி (ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் - எக்ஸ்போ) 2017 டிசம்பர் 16, 17 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் தலைவர் திரு. ஆர்.சுப்ரமணிய குமார் தொடக்க உரையாற்றுகிறார்.
மியூச்சுவல் ஃபண்டின் எதிர்காலம் (Future of Mutual Fund Investment - Direction, Strategy) குறித்து ஆதித்ய பிர்லா அசெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. ஏ.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றுகிறார்.
பங்குச் சந்தையில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் சவால்கள் (Challenges for the Market due to Disruption) குறித்து யுனிஃபை கேப்பிட்டல் திரு. ஜி, மாறன் உரையாற்றுகிறார்.
செல்வம் சேர்ப்பது 2018ஆம் ஆண்டிலும் தொடருமா (Can Wealth creation continue in 2018) என்ற தலைப்பில், ஈக்யுனாமிக்ஸ் நிறுவனர் திரு. ஜி.சொக்கலிங்கம் உரையாற்றுகிறார்.
முதல் நாளின் இரண்டாவது பகுதியில், 'சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் லாபமீட்ட டெக்னிக்கல் அனாலிஸ் (Technical Analysis For Retail Investors) என்ற தலைப்பில் மும்பையைச் சேர்ந்த குரோத் அவென்யூஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சி.கே.நாராயண் உரையாற்றுகிறார்.
தகவல் தொழில்நுட்ப காலத்தில் ஞானம் தேடுதல் (Seeking Wisdom in the Age of Information) என்னும் தலைப்பில் சஃபால் நிவெஷாக் நிறுவனர் திரு. விஷால் கன்டெல்வெல் உரையாற்றுகிறார்.
இடையூறுகளுக்கு இடையே செல்வம் சேர்த்தல் (Creating Wealth During Disruption)என்னும் தலைப்பில் வேல்யூ ரிசர்ச் நிறுவனர் திரு. திரேந்திர குமார் உரையாற்றுகிறார்.
'மியூச்சுவல் ஃபண்ட் - 2018 ஒரு பார்வை' (Outlook for Mutual Fund -2018)என்னும் தலைப்பில் சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி தலைமைச் செயல் அதிகாரி திரு. சுனில் சுப்ரமணியம் உரையாற்றுகிறார்.
பிசினஸ் தொடர்பான இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முதல் பகுதியில், இந்தியாவில் பெருகி வரும் இளைஞர் சக்தியை எவ்வாறு அறுவடை செய்யவேண்டும் (How India can reap demographic dividend ) என்ற தலைப்பில் கேரியர்360டாட்காம் நிறுவனர் திரு. மகேஷ்வர் பெரி உரையாற்றுகிறார்.
ஜிஎஸ்டிக்கு பிந்திய சவால்கள் & தீர்வுகள் (GST-Post Implementation Challenges & Solutions ) என்ற தலைப்பில் டைகூன் அட்வைசர்ஸ் நிறுவனர் திரு. எம்.சத்யகுமார் உரையாற்றுகிறார்.
ஆட்டோமேசன் & ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ் சவால்கள் (Automation and AI - The Biggest Challenge) குறித்து சென்னை ஐஐடி கணினி அறிவியல்துறை பேராசிரியர் திரு. வி.காமகோடி உரையாற்றுகிறார்.
மேக்ரோ எகனாமிக்ஸ் தொடர்பான இரண்டாம் பகுதியில், பொருளாதாரத்தில் டிஜிட்டலைசேசன் (New Citizens of Digital World - Opportunities and Risks for businesses & customers) குறித்து, பிசினஸ் ஜர்னலிஸ்ட், நூலாசிரியரும், ஃபவுன்டிங் ஃப்யூயல் இணை நிறுவனருமான திரு. என்.எஸ்.ராம்நாத் உரையாற்றுகிறார்.
இந்தியாவில் வர்த்தகம் செய்து வெற்றி பெறுவதற்கான சவால்கள் (Challenges in achieving ease of doing business in India) குறித்து பொருளாதார கட்டுரையாளர் திரு. விவேக் கவுல் உரையாற்றுகிறார்.
'இந்திய பங்குச் சந்தை மற்றும் உலகச் சந்தைகளில் 2018 ஆம் ஆண்டில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சிக்கல்கள் (Risks and Prospects for Global and and Indian Stock Markets in 2018) குறித்து சர்வதேச பொருளாதார் நிபுணர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன் உரையாற்றுகிறார்.
இந்த ஃபைனான்ஸ் & பிசினஸ் கன்கிளேவ் எக்ஸ்போ கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், நுழைவுக் கட்டனமாக ரூ.3000 மட்டும் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்.
2017 டிசம்பர் மாதம் 6 ஆம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்பவர்கள் சலுகையாக ரூ.2,500 செலுத்தினால் போதுமானது.
கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 99404 15222
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக