யூலிப் பாலிசி பிரீமியத்துக்கு ஜிஎஸ்டி எப்படி கணக்கிடுகிறார்கள் என விளக்க முடியுமா?
மகிழ்நிதி, கடையம், திருநெல்வேலி
பதில் + நிதி சாணக்கியன்
யூலிப் பாலிசியின் மொத்த பிரீமியம் மீது ஜி எஸ் டி (சரக்கு மற்றும் சேவை வரி) கணக்கிடுவது இல்லை.
இந்த பிரீமியத்தில் முதலீட்டுக்கு செல்லும் தொகை போக உள்ள, மீதி பாலிசி நிர்வாக கட்டணம், ஃபண்ட் மேலாண்மை கட்டணங்கள் அல்லது காப்பீடு கட்டணம் மீது 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. அட்டவணையை பார்த்தால் எளிதில் விளங்கும்.
நாட்டு மக்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்குவது அரசின் கடமை. அதற்கு செலுத்தும் பிரீமியத் தொகை மீது வரி வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
+ நிதி சாணக்கியன்
கேள்வி பதில்
கேள்விகளை அனுப்ப வேண்டிய இ மெயில் ஐடி
nidhimuthaleedu@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக