இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடனை பாதிக்கும் போக்குகள் ..!
திரு.ஏ. சங்கர், லஷ்மி விலாஸ் பேங்க்
இந்தியாவில் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான தொகுப்புகள் (SME clusters), 180 மாவட்டங்களில் 388 இடங்களில் இருக்கின்றன. இவை நாட்டின் தொழில் உற்பத்தியில் (industrial output) 40 சதவிகித பங்களிப்பையும் நேரடி ஏற்றுமதியில் (direct exports) 35 சதவிகித பங்களிப்பையும் கொண்டுள்ளன. வேலைவாய்ப்பின் அடிப்படையில் பார்த்தால், விவசாயத்துக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME) 1.4 கோடி (14 மில்லியன்) பேருக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கின்றன.
கடந்த 7 ஆண்டுகளில், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் எண்ணிக்கை 4.4% அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில், இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் (loan penetration) 2-3 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தத் துறைகளுக்கான மொத்தக் கடன் தேவை ரூ. 40 லட்சம் கோடிகளாக இருக்கிறது. இதில், 60% தொகை தற்போது முறை சார்ந்த முறைகளில் (formal channels) நிறைவேற்றப்படுகிறது. மீதி வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் (moneylenders) மூலம் பெறப்படுகிறது.
அந்த வகையில், அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகள், வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்கள் (NBFC’) இந்தச் சந்தையை கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் எம்எஸ்எம்இ பிரிவு வளர்ச்சிக் காண உதவிய 5 போக்குகள்
• கடந்த 10 ஆண்டுகளின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 6.8 சதவிகித அளவுக்கு அதிக வளர்ச்சியை கண்டிருப்பது.
• 'இந்தியாவில் உற்பத்தி' (Make in India) என்ற திட்டம் மூலம் உற்பத்தி மேம்பட்டிருப்பது
• முக்கியத் துறைகளான ரயில்வே, ராணுவம், இன்ஷூரன்ஸ் மற்றும் மருத்துவ கருவிகள் போன்றவற்றில் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment) செய்யப்பட்டிருப்பது
• நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில்பாதைகள் ( industrial corridors) உருவாகி இருப்பது
• வணிக வசதிகளை ஏற்பட்டுத்த மத்திய, மாநில அரசுகள் அதிக மாற்றங்களை செய்திருப்பது
• சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதி மேம்பட்டிருப்பது
கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் ரீடெய்ல் சேனல் அதிக வளர்ச்சிக் கண்டது. இதனால், சப்ளை செயின், உள்கட்டமைப்பு துறைக்கு உதவி செய்யும் விதமாக முதலீடுகள் பெருகின. இதன் தொடர்ச்சியாக எஸ்எம்இ நிறுவனங்கள் அதிக முள்ள பொறியியல் மற்றும் தானியங்கி தொழில்கள், உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அதிக வளர்ச்சிக் கண்டன.
இந்தப் போக்குகள், எம்எஸ்எம்இ வணிகம் மேலும் வளர்ச்சிக் காண உதவின. இந்த வளர்ச்சி மேலும் மேம்பட கீழே காணும் 4 முக்கிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
• போதிய அளவுக்கு பயிற்சி மற்றும் திறமையான மனித வளம்: இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க தொழில்துறையில் அதனை இயக்க திறமையான ஆப்பரேட்டர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். அதுவும் தங்கு தடையின்றி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்த இடைவெளியே நிரப்ப, தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தொழில்சார் பயிற்சி குறித்த தேசிய சபை (National skill development agency & National council on vocational training) மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
• கொள்கைகளில் சீர்திருத்தங்கள் (policy reforms) செய்யப்பட வேண்டியவை
• சுலபமாக தொழில் தொடங்குதல் மற்றும் ஏற்கெனவே இருக்கும் வணிகம் சுலபமாக செயல்படுதல்
• அனைத்து ஒப்புதல்களுக்கும் ஒற்றை சாளர முறை (Single window system)
• வெளிநாட்டு முதலீட்டு விதிமுறைகளில் தளர்வு
• இந்தத் தொழில்களுக்கு சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மிகவும் அதிகமாக அளிப்பது தேவையாக இருக்கிறது.
தொடர்ந்து கடன் அளித்தல்: தற்போது முறைசாரா ஆதாரங்கள் (informal sources) மூலம் 40 சதவிகித கடன்கள் அளிக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் எடுக்கப்பட வேண்டும்.
• இந்தக் கட்டுரை ஆசிரியர் திரு.ஏ. சங்கர், மூத்த துணைத் தலைவர் - எம்எஸ்எம்இ & கிராமப்புற வங்கி, லஷ்மி விலாஸ் பேங்க் (Mr. A. Shankar, SVP – MSME & Rural Banking, Lakshmi Vilas Bank)
1 கருத்து:
வணக்கம், நான் ராபர்ட் பெர்னாண்டஸ், பணம் தனியார் கடன், நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? உங்களுக்கு நிதி ஆதாயம் தேவை? நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த உலகளவில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. கடனைத் தேவைப்படும் அனைவருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச கடன்களை நான் கடனளிப்பேன், மேலும் 2% வீதத்தில் கடனை திரும்ப செலுத்த முடியும். வங்கிக் காசோலை அல்லது வங்கிக் காசோலை வழியாக கடனளிக்கிறேன். நிறைய கடிதங்கள் தேவையில்லை. நீங்கள் எங்கள் புகழை ஒரு கடன் பெற வேண்டும் என்றால்.
மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்: robertm.fernandzloancompany@gmail.com
நன்றி
ராபர்ட் பெர்னாண்ட்ஸ் கடன்கள்
திரு. ராபர்ட் பெர்னாண்டஸ்
கருத்துரையிடுக