முத்தூட் ஃபைனான்ஸ், எஸ்எம்இகளுக்கு
புதிய
கடன் திட்டம் அறிமுகம்
தங்கநகை அடமானக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் (Muthoot Finance), சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (small and medium enterprises-SMEs)இலக்காக வைத்து அவர்களின் நடைமுறை மூலதன (working capital) தேவைகளுக்கு கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, முத்தூட் ஃபைனான்ஸ், ரூ. 10 லட்சத்துக்கு மேல் தங்கக் கடன்களை ஆண்டுக்கு 12 சதவிகித வட்டியில் வழங்குகிறது. தற்போது இது போன்ற கடன்களுக்கு மற்ற நிறுவனங்கள் சுமார் 14-15% வட்டி வாங்கும் நிலையில் இது கவர்ச்சிகரமான திட்டமாகும்.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திரு. கே.ஆர்.பிஜிமோன் (Mr. K. R. Bijimon, Chief General Manager, Muthoot Finance) கூறும் போது, “நாங்கள் மிகவும் சந்தோஷமாக புதிய தங்க கடன் திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்தக் கடன் என்பது பிரத்யேக சலுகையை அளிக்கிறது. இது அனைவரும் லாபம் அளிக்கும் திட்டமாகும். தற்போது இந்தப் பிரிவில் எங்கள் நிறுவனம், 4 சதவிகிதம் பேருக்கு கடன் வழங்கி வருகிறது. இது 2018-19 ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (Q1FY2019-June 2018) 10 சதவிகிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தக் கடன் எங்களின் 4,200 கிளைகளிலும் கிடைக்கும். இதில் 942 கிளைகள் தமிழ்நாட்டில் உள்ளன.”
முத்தூட் குழுமம், 18 பல்துறை பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. சர்வதேச அளவில் இயங்கி வரும் இதற்கு 4,500க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தினசரி 2,53,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தக் குழும நிறுவனங்களின் கிளைகளுக்கு வந்து செல்கிறார்கள்.
கடந்த 1939 ம் ஆண்டு திரு. எம். ஜார்ஜ் முத்தூட், முத்தூட் குழுமத்தை ஆரம்பித்தார். அதன் ஒரு முன்னணி நிறுவனமாக முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் உள்ளது. இன்றைக்கு இந்த நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் உலகின் பெரிய தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. இதன் வசம் 146 டன்கள் தங்கம் உள்ளது. இந்தியாவில் அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இது உள்ளது.
முத்தூட் ஃபைனான்ஸ் தமிழ்நாட்டில் 942 கிளைகளை கொண்டுள்ளது. இது 16 மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சென்னையில், அதிகபட்சமாக 162 கிளைகள் உள்ளன. தற்போதைய நிலையில், இந்தக் குழுமம் 4,915 பேருக்கு வேலை அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ரூ. 4,804 கோடியை 2017-18ம் நிதி ஆண்டு, முதல் அரையாண்டு முடிவில் (H1FY18) நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம், மொத்தம் 27,52,252 வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. கிளைகளுக்கு தினசரி சராசரியக 42,053 வந்து செல்கிறார்கள். தினமும் 15,053 பேருக்கு தங்க அடமான கடன் வழங்கப்பட்டு வருகிறது. தங்க அடமானக் கடனின் மதிப்பு ரூ. 35,000 ஆகும். இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் தினசரி ரூ. 52.68 கோடி கடன் வழங்கி வருகிறது.
வெளிப்படையான தன்மை, முற்றிலும் தானியங்கி முறை மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றால் இதன் வாடிக்கையாளர்களான விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், குடும்பத் தலைவிகள் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தை விரும்புகிறார்கள். இந்தியாவில் சில்லறைக் கடன் பிரிவில் முத்தூட் தங்கக் கடன்கள் என்பது ஒரு புரட்சியாக உள்ளது.
Photo Caption (L-R): 1. Mr. Babu John, Corporate communication 2. Mr. K. R. Bijimon, Chief General Manager 3. Mr. J. Jonathan, Zonal Manager |
இந்த நிறுவனம் தொடர்ந்து, அதன் முதலீட்டு திட்டங்களை பரவலாக்கி வருகிறது. 2016-17ம் நிதி ஆண்டில், ஆர்பிஐ-ல் பதிவு செய்துள்ள மைக்ரோ ஃபைனான்ஸ் வங்கிச் சாரா நிதி நிறுவனமான பெல்ஸ்டார் நிறுவனத்தின் கேப்பிட்டல் ஆஃப் பெல்ஸ்டார் மற்றும் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (BIFPL) நிறுவனத்தின் 64.60 சதவிகித பங்குகளை கையக்கப்படுத்தி உள்ளது. இதன் கடன் போர்ட்ஃபோலியோ 2016-17 ம் ஆண்டில் 114% அதிகரித்து ரூ. 567 கோடியாக அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில், நிகர லாபம் ரூ. 6 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனம், ஐஆர்டிஏ அமைப்பில் பதிவு செய்துள்ள நேரடி இன்ஷூரன்ஸ் தரகு நிறுவனமான முத்தூட் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை கையக்கப்படுத்தி உள்ளது. இது 2016-17 ஆம் ஆண்டில், முதல் ஆண்டு பிரீமியமாக ரூ.70 வசூலித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.48 கோடியாக இருந்தது.
2016-17 ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனம், அதன் வீட்டு வசதி நிறுவனமான முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா)வில், அதன் பங்கு மூலதனத்தை 79%லிருந்து 88.27% ஆக அதிகரித்துள்ளது. கடன் போர்ட்ஃபோலியோ ரூ. 409 கோடியிலிருந்து ரூ. 441 கோடியாக அதிகரித்துள்ளது. 2016-17 ம் ஆண்டில் மொத்த வருமானம் ரூ.24 கோடியாக அதிகரித்துள்ளது. 2015-16ம் ஆண்டில் இது ரூ. 2 கோடியாக இருந்தது. 2016-17 ம் ஆண்டில் இதன் நிகர லாபம் ரூ.1.36 கோடியிலிருந்து ரூ. 2.87 கோடியாக அதிகரித்துள்ளது.
இலங்கை துணை நிறுவனமான ஆசியா அசெட் ஃபைனான்ஸ் பிஎல்சி-ல் இதன் பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளது. 2016-17ம் ஆம் ஆண்டில் இதன் கடன் போர்ட்ஃபோலியோ 26 சதவிகிதம் அதிகரித்து LKR 866 கோடியாக அதிகரித்துள்ளது. 2016-17ம் ஆம் ஆண்டில் இதன் மொத்த வருமானம் LKR 213 கோடியாக உள்ளது. 2016-17-ல் இது LKR 139 கோடியாக இருந்தது. 2016-17-ல் நிகர லாபம் ரூ. LKR 28 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ. LKR 18 கோடியாக இருந்தது.
முத்தூட் ஃபைனான்ஸ் பற்றி
முத்தூட ஃபைனான்ஸ், இந்தியாவின் மிகப் பெரிய தங்க நகை கடன் வழங்கும் நிறுவனமாக உள்ளது. இதன் தலைமை அலுவலகம் இந்தியாவின் தென்மாநிலமான கேரளாவில் உள்ளது.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் வணிக செயல்பாட்டு வரலாறு இன்றைக்கு 78 ஆண்டுகளுக்கு முன் 1939 ம் ஆண்டு எம். ஜார்ஜ் முத்தூட் (தற்போதைய நிறுவனர்களின் தந்தை) என்பவரால் ஆரம்ப்க்கப்பட்டதாகும். இந்த வணிகத்தை இவரின் தந்தை நினன் மாதை முத்தூட் 1887 ம் ஆரம்பித்தார்.
தங்க நகைகளின் அடமானத்தின் பேரில் இந்த நிறுவனம், தனிநபர் மற்றும் வணிக கடன்களை வழங்கி வருகிறது. எதிர்பாராத குறுகிய கால தேவைகளுக்கு இந்தக் கடன் வாங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச் சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு
Babu John Malayil
Muthoot Finance Ltd
Email: babujohn@muthootgroup.com
Contact: 0484- 6690357 Dimple Momaya
Adfactors Public Relations Pvt Ltd
Email: dimple.momaya@adfactorspr.com
Contact: 98207 62036
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக