மொத்தப் பக்கக்காட்சிகள்

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தலைமைத்துவ நிலையை காட்சிப்படுத்தும் சிஐஐ கனெக்ட் 2017 மாநாடு


தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தலைமைத்துவ நிலையை காட்சிப்படுத்தும் சிஐஐ கனெக்ட் 2017 மாநாடு

கனெக்ட்-என்ற இந்த இரு நாள் மாநாடானது, நுண்ணறிவுமிக்க பொரூளாதாரம் -“புதிய யுகத்திற்காக தொழில்நுட்பத்தை உகந்தவாறு பயன்படுத்தல்” என்ற கருப்பொருள் மீது சிறப்பு கவனம் செலுத்தும்
சென்னை, நவம்பர் 01, 2017 : தகவல் மற்றும் செய்தித்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) குறித்த ஒரு முக்கிய வருடாந்திர மாநாடு மற்றும் விரித்துரைப்பு கண்காட்சியை இந்திய தொழில் கூட்டமைப்பானது (சிஐஐ - CII), தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து, ‘கனெக்ட் 2017’என்ற பெயரில் அதன் 16ம் பதிப்பினை 2017 நவம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சென்னையிலுள்ள ஹோட்டல் தாஜ் கோரமண்டல் வளாகத்தில் நடத்துகிறது.

‘புதிய யுகத்திற்காக தொழில்நுட்பத்தை உகந்தவாறு பயன்படுத்தல்’என்ற மையக்கருத்து கொண்ட இந்த இரண்டு நாள் மாநாடானது,இம்மாநிலத்தின் தகவல் மற்றும் செய்தித்தொடர்பு தொழில்நுட்ப சூழலமைப்பை ஊக்குவிப்பதையும்மற்றும் இத்தொழில்துறைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சாகமாகவுள்ள கொள்கை கட்டமைப்புகளை உகந்தவாறு பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் நடுவண் அரசின் “டிஜிட்டல் இந்தியாதிட்டத்தின் குறிக்கோள்களை செயல்படுத்த முனைகின்ற குறிக்கோளுடன் நடத்தப்படும் கனெக்ட் 2017-மாநாட்டில், இந்தியாவில் புதிய யுகத்துக்கான தொழில்நுட்பத்தையும் மற்றும் தமிழ்நாட்டில்  ஐ.ட்டி (IT) மற்றும்  ஐ.சி.ட்டி (ICT) துறையில் தமிழ்நாடு மாநிலத்தின் திறனை காட்சிப்படுத்தவும்இத்தொழில்துறையின் முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் நடத்தப்படும் பிரத்யேக அமர்வுகள், குழு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

வளர்ந்துவரும் சூழலமைப்பை ஒழுங்குமுறையோடு சீர்படுத்துவதற்கு சாதகமான கொள்கைகளின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் தமிழ்நாட்டில் ஐ.சி.ட்டி தொழிற்துறையின் வளர்ச்சியை இன்னும் வலுப்படுத்தக்கூடிய புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்குரிய அவசியம் குறித்தும் இம்மாநாடு வலியுறுத்தும்.

சென்னையில் நடைபெறவுள்ள “சிஐஐ கனெக்ட் 2017”மாநாட்டின் தலைவர் திரு. ரவி விஸ்வநாதன் இந்நிகழ்வு குறித்து பேசுகையில், “16 ஆண்டுகளாக வெற்றிகரமாக இதனை நடத்திய கடந்த கால வரலாற்றை கொண்டிருப்பதால், அதிக வெற்றிகரமான முனைப்புத்திட்டமாகவும், பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியிருப்பதன் மூலம் கௌரவத்தையும் நம்பகத்தன்மையையும் ஈட்டிய நிகழ்வாகவும்ஒரு மாநாடாக கனெக்ட்புகழ்பெற்றிருக்கிறது என்று உறுதியாக கூறலாம். இது தொடங்கப்பட்டதிலிருந்து, புதிய ஐடி கொள்கை, 2 &3 ஆம் நிலை நகரங்களில் ஐடி பூங்காக்கள், ஐடி தொழில் அமைவிடங்கள் மற்றும் சிறப்பு ஏற்றுமதி மண்டலங்கள் உருவாக்குதல் போன்ற முக்கியமான முனைப்பு திட்டங்களுக்கு தொழில்துறை - அரசுக்கிடையே தொடர்பை உருவாக்கி வளர்ப்பதன் வழியாக கனெக்ட் மாநாடு ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது,”என்று கூறினார்.

‘ புதிய யுகத்திற்காக தொழில்நுட்பத்தை உகந்தவாறு பயன்படுத்தல்’என்ற மையக்கருத்தை விவரணை செய்த திரு. ரவி விஸ்வநாதன், நமது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு ஒருங்கிணைந்த அம்சமாக தொழில்நுட்பம் இப்போது ஆகிவிட்டது மற்றும் அவைகளில்லாமல் பெரும்பாலான பணிகளை செய்வது குறித்து நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாதுஎன்று குறிப்பிட்டார். “தொழில்நுட்பம் இல்லையென்றால் செயல்பாடுகளில் கட்டுப்பாடும், வரம்பும் நமக்கு இருக்கும். மனிதனுக்கும் மற்றும் இயந்திரத்துக்குமிடையே நிலவுகின்ற ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையின் அளவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆகவே சாத்தியமுள்ள பாதுகாப்பான வழிமுறையில் இத்தகைய தொழில்நுட்பங்களை நாம் ஏற்று பயன்பாட்டுக்காக செயல்படுத்துவது அவசியமாகும். ஒட்டுமொத்தமாக பார்க்கையி்ல் ஐ.சி.ட்டி துறையின் வளர்ச்சியானது, அதிக நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. இத்தகைய செயல்நடவடிக்கைகள், இந்நாட்டில் ஐ.சி.ட்டி முதலீடுகளுக்கான அமைவிடங்களுள் முதன்மையானதாக தமிழ்நாடு மாநிலத்தை இன்னும் அதிகமாக வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,”என்று அவர் மேலும் கூறினார்.

கனெக்ட் 2017 மாநாட்டின் அமர்வுகள்,புதுயுகத்திற்கான கொள்கை கட்டமைப்புகள் மீது மட்டுமின்றி, ஆளுகை, எதிர்கால தொழில்நுட்பம், ஆட்டோமோட்டிவ் மற்றும் சுகாதார சேவை பிரிவுகளில் தொழில்நுட்பத்தின் போக்குகள் ஆகியவை குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தும்.
இந்த இரு நாள் மாநாட்டில் சிறப்புரையாற்றவுள்ள முக்கிய பேச்சாளர்கள் கீழ்வருமாறு :

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் மாண்புமிகு அமைச்சர் டாக்டர். எம். மணிகண்டன், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களின் தலைமை இயக்குநர் டாக்டர். ஓம்கார் ராய், ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. பிரகாஷ்குமார், காக்னிசென்ட் இந்தியா நிறுவனத்தின் செயலாக்க துணைத்தலைவர் திரு. ஆர். சந்திரசேகரன், ஐபிஎம் இந்தியா பி. லிமிடெட்-ன் தலைவர் திருமதி. வனிதா நாரயணன், மைண்டு ட்ரீ லிமிடெட்-ன் செயலாக்க தலைவர் திரு. கிருஷ்ணகுமார் நடராஜன், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் முதன்மைச் செயலர் திரு. டி.கே. ராமச்சந்திரன்-இ.ஆ.ப., காக்னிசென்ட்  டெக்னாலஜி சொல்யூசன்ஸ்-ன் முன்னாள் துணைத்தலைவர் திரு. என். லட்சுமி நாராயணன், சிஐஐ-ன் தமிழ்நாடு பிராந்தியத்தின் முன்னாள் தலைவரும், டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் செயலாக்க இயக்குநரும், முதன்மை நிதி அலுவலருமான திரு. எஸ். மகாலிங்கம், டன்போஸ் இன்டஸ்ட்ரிஸ் பி.லிட்-ன் தலைவரும் சிஐஐ தமிழ்நாடு பிரிவின் தலைவருமான திரு. பி. இரவிச்சந்திரன், ஐஐடி மெட்ராஸ்-ன் இயக்குநர் புரொபசர் பாஸ்கர் இராமமூர்த்தி, டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூசன்ஸ்-ன் செயலாக்க இயக்குநர் திரு. ஜி. சீனிவாச ராகவன் மற்றும் பல பிரபல ஆளுமைகள்.

For any questions on Partnerships / Delegate Nominations / Sponsorships
Please contact Mr S Venkataraman, phone: 044-42444555 or mobile: +91-9500052852 or fax: 044-42444510 or email: s.venkataraman@cii.in
For any questions on Exhibition
Please contact Ms Soumya TS, mobile: +91-9003087929 / +91-9080078447 or email: soumya.ts@cii.in
For any questions on Connect Awards
Please contact Ms P Diwya, phone: +044-42444555(541) or email: p.diwya@cii.in
For more details

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...