கடந்த ஐந்தாண்டுகளில் (2012 செப்டம்பர் முதல் 2017 செப்டம்பர்) இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை சுமார் 9 மடங்கு அதிகரித்துள்ளது.
இதே கால கட்டத்தில் வங்கி டெபாசிட் 1.7 மடங்குதான் அதிகரித்திருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்ததால், அந்த முதலீடு உயர்ந்துள்ளது. அப்படி இருந்தும், ஃபிக்ஸட் டெபாசிட் உடன் ஒப்பிடும் போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சுமார் 18%தான்.