ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் ஐபிஓ முதலீடு செய்யலாமா?
- மகேஷ், மதுரை
+ நிதி சாணக்கியன்
திரு. அனில் அம்பானிக்குச் சொந்தமான நிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ஐபிஓ மூலம் ரூ. 1,524 கோடி நிதித் திரட்ட திட்டமிட்டுள்ளது.
2017 அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது. பங்குகள் ரூ. 247-252 என்ற விலைப்பட்டையில் விற்கப்பட இருக்கின்றன. குறைந்தபட்சம் 59 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த ஐபிஓவில் புதிதாக 2.44 கோடி பங்குகளும், பங்குதாரர்கள் வசமுள்ள பங்குகளில் 3.67 கோடி பங்குகளும் விற்கப்பட இருக்கின்றன. முதன்முதலாக ஐபிஓ வெளியிடும் மியூச்சுவல் ஃபண்ட் (அஸெட் மேனேஜ்மென்ட் ) நிறுவனமாக இது இருக்கிறது.
இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் கேபிட்டல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் லைஃப் நிறுவனமும் இணைந்து நிர்வகித்து வருகின்றன. இந்த நிறுவனம் ரூ. 3.8 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
|
In English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக