ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் ரிஸ்க் எதுவும் இல்லை என என் தோழி சொல்கிறாள். உண்மையா?
- கமலா, சன்னதி தெரு, திருவாரூர்.
பதில்:
+ நிதி சாணக்கியன்
'' வட்டி விகிதம் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது கடைசி வரைக்கும் கொடுக்கப்படும், அதில் ரிஸ்க் இல்லை. அதேநேரத்தில், அனைவரும் ரிஸ்க் இல்லாது என்று நினைத்து கொண்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்டி) முதலீட்டில் இருக்கதான் செய்கிறது.
அதாவது, வங்கி திவாலாகும் போது அதில் போட்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 1 லட்சத்துக்குதான் இன்ஷுரன்ஸ் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட தொகை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இதனால், அதிக தொகையை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் ஆக போடுபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் பிரித்து போடுவது நல்லது. அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முதலீட்டை பிரித்து மேற்கொள்ளலாம்.