ஃபிக்ஸட் டெபாசிட் எவ்வளவு காலத்துக்கு ஒரு முறை வட்டி தரப்படும்.?
முத்துமாரி, கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்
+ நிதி சாணக்கியன்
ஃபிக்ஸட் டெபாசிட் -ல் வங்கி சேமிப்பு வட்டியை (ஆண்டுக்கு 3.5% - 4%) விட கூடுதலாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் வட்டி கிடைக்கும். இந்த வட்டி என்பது முதலீட்டு காலத்தை பொறுத்து மாறுபடும்.
பொதுவாக தற்போதைய நிலையில் இந்த வட்டி 5% முதல் 7 வரை இருக்கிறது.
பொதுவாக, மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி அளிக்கப்படும். தேவைப்பட்டால், மாதம், ஆறு மாதம், ஆண்டுக்கு ஒரு முறை பெற்றுக் கொள்ளலாம்.
முதலீட்டு காலம் என்று எடுத்துக் கொண்டால் 7 நாள்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை செல்கிறது.
தற்போதைய நிலையில் குறுகிய காலத்துக்குதான் வங்கிகளுக்கு நிதித் தேவைப்படுகிறது. இதனால், அவை குறுகிய கால முதலீட்டுக்குதான் அதிக வட்டி அளிக்கின்றன. எனவே, இப்போதைக்கு குறுகிய கால முதலீட்டை தேர்வு செய்வது நல்லது.
தேர்ந்தெடுத்திருக்கும் காலத்துக்கு என்ன வட்டி தருகிறோம் என்று ஆரம்பத்தில் சொன்னார்களோ, அதே வட்டியை முதிர்வில் தந்துவிடுவார்கள். இடையில் வட்டி ஏறினானோ, இறங்கினாலோ நீங்கள் போட்டிருக்கும் எஃடிக்கான வட்டியில் மாற்றம் இருக்காது.