ரெப்போ விகிதம் வெர்சஸ் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்
ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்கள் ; சிறு விளக்கம்
ரெப்போ விகிதம்
வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து (ஆர்பிஐ) குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம், ரெப்போ விகிதம் (Repo Rate) எனப்படும்.
இது 2011 ஜூலையில் 8 சதவிகிதமாக இருந்தது. தற்போது 2017 அக்டோபரில் 6 சதவிகிதமாக இருக்கிறது.
ரெப்போ விகிதம் அதிகமாக இருந்தால் வங்கிகளின் வட்டி செலவு அதிகரிக்கும். இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டியை வங்கிகள் மேலும் உயர்த்தும்.
ரெப்போ விகிதம், குறைவாக இருந்தால் வங்கிகளின் வட்டி செலவு குறையும். இதனை அடுத்து வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க தொடங்கும்.
ரிவர்ஸ் ரெப்போ விகிதம்
பாரத ரிசர்வ் வங்கி (எஸ்.பி.ஐ), வங்கிகளிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனுக்கான கடனிற்கான வட்டி விகிதம், ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படுகிறது.
இது 2011 ஜூலையில் 7 சதவிகிதமாக இருந்தது. தற்போது 2017 அக்டோபரில் 5.75 சதவிகிதமாக இருக்கிறது.
இதனால், வங்கிகள் அவற்றின் உபரி நிதியை ஆர்.பி.ஐ - ல் அதிக அளவில் இருப்பு வைக்கும். எனவே, பணப் புழக்கம் குறைய வாய்ப்புள்ளது.
ரொக்க இருப்பு விகிதம்
வங்கிகள் அவற்றால் திரட்டப்படும் டெபாசிட்டுகளில் குறிப்பிட்ட சதவிகித்தை பாரத ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும். இது ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்) எனப்படும்.
2011 ஜூலையில் ரொக்க இருப்பு விகிதம் 6 சதவிகிதமாக இருந்தது. தற்போது 2017 அக்டோபரில் 4 சதவிகிதமாக இருக்கிறது.
நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் போது ரொக்க இருப்பு விகிதத்தை ஆர்பிஐ அதிகரிக்கும். பணவீக்கம் குறைவாக இருக்கும் போது ரொக்க இருப்பு விகிதத்தை ஆர்பிஐ குறைக்கும்.
https://www.rbi.org.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக