மொத்தப் பக்கக்காட்சிகள்

எல்&டி ஃபைனான்ஸ் மீண்டும் லாப பாதைக்கு திரும்பியது...!

எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனத்தை லாபத்துக்கு கொண்டு வர உதவிய துபாஷியின் துல்லியமான சிந்தனை..!

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மிகவும் மோசமான அழுத்தத்தில் மற்றும் பங்கு மூலதனம் மீதான வருவாய் (RoE) குறைந்து காணப்பட்ட முன்னணி ஐந்து வங்கிச் சாரா நிதி நிறுவனங்களில் (NBFC) ஒன்றாக எல்&டி ஃபைனான்ஸ் (L&T Finance) இருந்தது. அது இப்போது அதன் புதிய தலைமை செயல் அதிகாரி தினாநாத் துபாஷி -யின்  (Dinanath  Dubhashi) துல்லியமான சிந்தனையால், நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு திரும்பி இருக்கிறது.

சுருக்கமாக சொல்வது என்றால், மிகப் பெரிய பொறியியல் குழுமமான லார்சன் & டூப்ரோவின் (Larsen & Toubro), நிதிச் சேவைகள் பிரிவான எல்&டி ஃபைனான்ஸ், கடந்த ஆண்டு வரை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆறு காலாண்டுகளாக அது முன்னேற்ற பாதைக்கு திரும்பி இருக்கிறது.

இன்று எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் (L&T Finance Holdings ), வங்கிச் சாரா நிதி நிறுவனங்களில் முன்னணி ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதாவது, பங்கு மூலதனம் மீதான வருவாய் அதிகம் கொண்ட நிறுவனமாகவும் சிறந்த சொத்து தரத்தை கொண்ட நிறுவனமாகவும், அதிக பங்கு மதிப்பு (market capitalization) கொண்ட நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.

‘’ நாங்கள் வங்கிச் சாரா நிதி நிறுவனமா, வங்கியா என்பதில் குழப்பம் இருந்தது. முதலில் இதனை சரி செய்து, முற்றிலும் வங்கிச் சாரா நிதி நிறுவனமாக செயல்பட நாங்கள் முடிவு செய்தோம். இதனை அடுத்து குழப்பங்களை தவிர்த்து, சரியான வணிக திட்டங்களை வகுத்து சரியான அமைப்புடன் செயல்படத் தொடங்கினோம், சரியான செயல் திட்டம் மூலம் சரியான நபர்களை சென்று அடைய திட்டமிட்டோம். மேலும்முந்தைய தோல்விகளுக்கு  எங்களில் யாரையும் குற்றம் சாட்டாமல் அடுத்தக் கட்ட ஆக்கப்பூர்வ பணிக்கு திரும்பினோம். 2020 ம் ஆண்டுக்குள் பங்கு மூலதனம் மீதான வருவாயை நான்கு மடங்காக அதிகரிக்கவும், அது 2020 ம் ஆண்டுக்குள் 18-20 சதவிகிதமாக இருக்கவும் திட்டமிட்டோம். ஆனால், இன்றைக்கு ஓராண்டுக்கு முன்பே அந்தச் சாதனையை அடையும் அளவுக்கு முன்னேறி இருக்கிறோம்என எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக 2016 ஜூலையில் பதவி ஏற்ற துபாஷி தனது நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு வரும் திட்டம் 2016 ஏப்ரல் மாதம் முதல் அமலில் இருந்தது.   

சரியான கட்டண அமைப்பு, சரியான நபர்களை சேவை சென்று சேர்வது, சரியான நிதித் திட்டங்கள் (right product), சரியான செயல்படுத்தும் உத்திகள் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
எல்&டி ஃபைனான்ஸ்
 தலைமை செயல் அதிகாரி தினாநாத் துபாஷி

‘’அனைத்துக்கும் மேலே, அதிக செலவு என்பது எங்களின் லாபம், மகிழ்ச்சி, சுறுசுறுப்பை காலி செய்வதாக இருந்தது. வங்கிச் சாரா நிதி நிறுவனம் என்கிறபட்சத்தில் நாங்கள் வேகமாக சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியவர்களாக இருந்தோம். அப்போது நாங்கள் 20-க்கும் மேற்பட்ட முதலீட்டு திட்டங்களை கொண்டிருந்தோம். அவற்றை ஐந்து ஆக குறைத்து இலக்கை சரியானதாக மாற்றினோம். வெற்றிக் கண்டோம்என்றார் துபாஷி.

துபாஷி, எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 2007 ம் ஆண்டு சேர்ந்தார். அதற்கு முன் அவர், பிஎன்பி பரிபா (BNP Paribas), கேர் ரேட்டிங்ஸ் மற்றும் எஸ்பிஐ கேப்ஸ் ஆகியவற்றில் பணியாற்றி பழுத்த அனுபவம் பெற்றிருந்தார்

‘’நான் பதவி ஏற்ற போது, எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பல விஷயங்கள் நஷ்டம் ஏற்படுத்துவோடு, சுமையை அதிகரிப்பதாகவும் இருந்தது. மேலும், அவற்றில் பல முன்னேறுவதற்கான நம்பிக்கையுடன் காணப்படவில்லை.

‘’நாங்கள் கட்டுமான கருவிகள், கார்கள் போன்றவற்றில் இருக்கிறோம். இந்தப் பிரிவுகளில் மற்றவர்கள் எங்களை விட நன்றாக செயல்படுகிறார்கள். நாங்கள் டிராக்டர்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி உதவி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மேலும் எங்களின் வாடிக்கையாளர்கள் நடுத்தரம் மற்றும் அதிக வருவாய் பிரிவினராக கலந்து இருப்பது எங்களுக்கு சாதமான விஷயமாக இருக்கிறது.”

இதேபோல், பல நிதித் திட்டங்களை மூடிவிட்டு, ஐந்தே திட்டங்களை மட்டும் கொண்டிருக்கிறோம். தற்போது, உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற நிதி உதவி, வீட்டுக் கடன், மியூச்சுவல் ஃபண்ட், செல்வ மேலாண்மை (wealth management) ஆகிய ஐந்து பிரிவுகளில் மட்டும் செயல்பட்டு வருகிறோம்.
 ‘’2016 ஏப்ரல் முதல் நாங்கள் நான்கே நான்கு விஷயங்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினோம்: குறிப்பிட்ட வணிகத்தை வளர்க்க கவனம் செலுத்தினோம், தீவிரம் அல்லாதபிரதானம் அல்லாத வணிகத்தை நிறுத்தினோம், அதிக கட்டண வருமானத்தை ஏற்கெனவே அளித்த வணிகத்தை அதிகரித்தோம், லாபத்தை அதிகரிக்கும் விதமாக செலவுகளை தீவிரமாக குறைக்கத் தொடங்கினோம், இடர் மேலாண்மை முறையை (risk management system) வலிமையாக்கினோம் மற்றும் ஒவ்வொரு பிரிவின் தலைவருக்கும் பொறுப்பு அளித்தோம், அனைத்து விஷயங்களையும் கணக்கில் கொண்டு வந்தோம்

சீரமைப்பின் ஒரு பகுதியாக, அதிக முக்கியம் இல்லாத  திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பது நிறுத்தப்பட்டது. இதன் மூலம் நிறுவனத்தின் மூலதனம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது.

கார்கள், அனைத்து வகையான வர்த்தக வாகனங்கள், சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான குறித்தக் கால கடன்கள் (SME term-loans), கட்டுமான கருவிகள் வாங்க கடன், ஜெனரேட்டர் கடன் மற்றும் மூன்று சக்கர கடன்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.


அடுத்து முக்கிய பிரச்னையாக இருந்தது, பணியாளர் சம்பளம். அவர்களின் பணி சிறப்பாக அமைய, செயல்பாட்டின் (performance) அடிப்படையில் சம்பளம் என மாற்றி அமைக்கப்பட்டது

இன்றைக்கு பங்கு மதிப்பு அடிப்படையில் டாப் 5 வங்கிச் சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாக எல்&டி ஃபைனான்ஸ் திகழ்கிறது. அதன் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.35,514 கோடியாக இருக்கிறது. எஸ்பிஐ உள்ளிட்ட இதர அரசு வங்கிகள் நடத்தும் வங்கிச் சாரா நிதி நிறுவனங்களை விட எல்&டி மிகவும் மதிப்பு மிக்கதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் இந்தியாபுல்ஸ் ஃபைனான்ஸ்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எல்ஐசி ஹெச்எஃப்எல், பஜாஜ் ஃபைனான்ஸ்- முந்துவதற்கு தயாராக உள்ளது

ஹெச்டிஎஃப்சி மிகவும் மதிப்பு மிக்க வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனமாக ரூ. 2.77 டிரில்லியன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உடன் இருக்கிறது.  

நடப்பு 2017 ம் ஆண்டில் இது வரைக்குமான காலத்தில்  எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை சுமார் 120 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் பிஎஸ்சி-ன்ன் சென்செக்ஸ் சுமார் 19%தான் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை, தொடந்து ஏழு தினங்கள் இழப்பை சந்தித்து வந்த நிலையில், பங்குச் சந்தை பெரிய ஏற்றம் இல்லாமல் நிறைவு பெற்றது. அன்று இந்த நிறுவனப் பங்கின் விலை 2.4 சதவிகிதம் அதிகரித்து ரூ. 195 ஆக அதிகரித்துள்ளது

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில்  49 சதவிகிதம் அதிகரித்து ரூ. 309 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் பங்கு மூலதனம் மூலமான வருமானம் 3.85 சதவிகிதம் (385 bps) அதிகரித்து, 9.78 சதவிகிதத்திலிருந்து  13.63 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக் கடன் (Gross NPA) 1.4% குறைந்து 5.71 சதவிகிதமாக உள்ளது.  

துபாஷி மேலும் கூறும் போது, ''பங்கு மூலதனம் மூலமான வருமானம், ஜூன் உடன் முடிந்த காலாண்டில் 13.63 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 9.5 சதவிகிதமாக இருந்து, வளர்ந்து வந்துள்ளது. வரும் 2018 மார்ச் இறுதிக்குள் இது 16 சதவிகிதம் தொடும் என நம்புகிறோம். இது 2019 மாரச் மாதத்தில் 18-19 சதவிகிதமாக அதிகரித்து இருக்கும். இதன்படி, இலக்கை ஓராண்டுக்கு முன்பே அடைந்துவிடுமோம்

வேலையை விட்டுச் செல்லும் பணியாளர்களின் சதவிகிதம் நடுத்தர மற்றும் கீழ் நிலைகளில் சுமார் 10 சதவிகிதமாக உள்ளது. இது இந்தத் துறையின் சராசரியை ஒட்டியே இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும் ஒரு விஷயம்செலவுக்கும் வருமானத்துக்கும் ஆன விகிதம் (cost-to-income ratio) 23 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. 2015-16 வரை பல தோல்விகளை சந்தித்து வந்த நிறுவனம், முதலீட்டு திட்டங்களை ஐந்தாக குறைத்த பிறகு 2016-17 முதல் சந்தையை விட சிறப்பாக செயல்பட தொடங்கி இருக்கிறது 

2017-18 ம் ஆண்டில் பங்கு மூலதனம் மீதான வருமான 18-19 சதவிகிதமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். கடந்த ஐந்து காலாண்டுகளில் திட்டமிட்டப்படி செயலாற்றி வருவதால் அது நிறைவெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறதுஎன்றார் துபாஷி.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...