பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் : இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறையும்.. பங்குச் சந்தைக்குப் பாதகமா?
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்ட ஓரிரு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை றுகிய காலத்த்தில் குறைக்கும் என்பது உண்மை.
இதனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி குறையும் நிலை உருவாகி இருக்கிறது. தனிப்பட்ட சில துறைகள் வளர்ச்சி இருந்தாலும் ஒட்டு மொத்த பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது.
இதனை அடுத்து வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து முதலீடுகளை அதிகமாக வெளியே எடுத்து வருகின்றனர்.
2017 ம் ஆண்டில் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் முறையே 22% மற்றும் 20% ஏற்றம் கண்டு சர்வதேச சந்தைகளில் வேகமாக வளர்ந்துள்ளது.
ஆனாலும், வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் கடந்த ஏழு வாரங்களில் 2.66 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்று பணமாக்கி இருக்கிறார்கள்.
அதேநேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் போன்ற உள்நாட்டு முதலீட்டாளர்கள் (டிஐஐ) அதை ஈடுகட்டும் வகையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்.
எனவே, இந்தியப் பங்குச் சந்தைகள் அவற்றில் போக்கில் நிலைத்தன்மையுடன் இருக்கும் என்று நம்பலாம் என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள்.