மொத்தப் பக்கக்காட்சிகள்

பிசினஸ் சீக்ரெட்ஸ் ‘கவின்கேர்’ சி.கே .ரங்கநாதன்

பிசினஸ் சீக்ரெட்ஸ்


‘பிசினஸா... எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்... அதைப் பற்றி எனக்குத் தெரியாது... எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை...’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது. 
முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்... அதற்கு முதலீடு செய்ய என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து, திட்டமிட்டு, எளிமையான முறையில் கையாளும்பட்சத்தில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறும் உத்திகளைப் பற்றி இந்த நூல் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. என்ன தொழில் செய்ய வேண்டும்? அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும்? பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்? பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது? அதற்கான திட்டங்கள் என்ன? போன்ற நுணுக்கமான வழிமுறைகளை எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு. 
பிசினஸ் செய்வதில் குறுக்குவழி கூடாது; அதனால் சந்திக்க நேரிடும் விளைவுகள்... வருமான வரி செலுத்துவதன் அவசியங்கள்; அதனால் கிடைக்கும் மரியாதை... வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல்; இதனால் கூடுதல் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு... போன்ற பிசினஸ் சீக்ரெட்ஸ்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சி.கே.ஆர். நாணயம் விகடனில் தொடராக வெளிவந்த பிசினஸ் சீக்ரெட்ஸ், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. 
சிறந்த ஆலோசனைகளையும் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும் பெற்று, உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிபெற, பக்கங்களைப் புரட்டுங்கள்... பிசினஸில் வெல்லுங்கள்!
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...