மொத்தப் பக்கக்காட்சிகள்

யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் ஃபண்ட் 31 வருடத்தில் 73 மடங்கு வருமானம்

யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் - செல்வம் உருவாக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல்..!

இந்தியாவின் முதல் பங்குச் சந்தை சார்ந்த (ஈக்விட்டி) மியூச்சுவல் ஃபண்ட், யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் (UTI Mastershare Unit Scheme). இது கடந்த 1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாக செல்வம் உருவாக்கி (Wealth Creation) வருகிறது. யூடிஐ மாஸ்டர்ஷேர்கடந்த  31 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பங்குச் சந்தைஏற்ற  இறக்கத்தில் இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு இடைவெளி இல்லாமல் டிவிடெண்டுகளை தொடர்ந்து வழங்கி இருக்கிறது. குறிப்பாக 2000 - 2004 ஆம் ஆண்டுகளில் பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்த போது கூட இந்த ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி உள்ளது. இதன் துணிச்சலான முதலீட்டுக் கொள்கைதான் இதற்கு காரணம் என்றால் மிகை இல்லை. அத்துடன் பல்வேறு தருணங்களில் இலவச மற்றும் உரிமை (bonus and rights)  யூனிட்களையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கி இருக்கிறது.
எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்கிற ஓபன் எண்டெட்  மற்றும் பங்குச்  சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட் ஆன இதில் ஆகஸ்ட் 31, 2017 நிலவரப்படி, 4,362 கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது. 5.33 லட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள்நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த நிதி ஆவணங்கள், பாண்டுகள், கடன் பத்திரங்கள்  போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் மூலதன பெருக்கம் / அல்லது வருமான விநியோகத்தை நீண்ட காலமாக முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது. இந்தத் திட்டம் ஒழுங்கான முதலீட்டு முறையை கொண்டுள்ளது. மேலும் ஆண்டு தோறும் முதலீட்டாளர்கள் லாபம் அடையும் விதமாக தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
யூடிஐ மார்க்கெட்ஷேர் ஃபண்ட்-ன் முதலீட்டுக் கலவை (போர்ட்ஃபோலியோலார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் அதிகம் முதலீடு செய்யக் கூடியதாக இருக்கிறதுஇதன் முதலீட்டுக் கலவையில் முன்னணி நிறுவனப் பங்குகளான ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க், மாருதி சுஸிகிஇண்டஸ்இந்த் பேங்க், டிசிஎஸ், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா  மோட்டார்ஸ்ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிபிசிஎல் மற்றும் எல்&டி போன்ற நிறுவனப் பங்குகள் 46 சதவிகித இடத்தை  பிடித்திருக்கின்றன. இந்த ஃபண்டில் துறை / நிறுவனப் பங்கு ஒதுக்கீடு மற்றும் பங்குகளின் எண்ணிக்கை தேர்வு, எப்போதும் ஓர் ஒழுங்கு முறையுடன் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஃபண்ட், குறைவான ஏற்ற இறக்கத்தில் (lower volatility), தொடர்ந்து நிலையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. யூடிஐ மாஸ்டர்ஷேர், ஆரம்பம் முதல், 31.8.17 நிலவரப்படி ஆண்டுக்கு சராசரியாக (CAGR)   14.92% வருமானம் கொடுத்திருக்கிறது. இதே கால கட்டத்தில் இதன் பெஞ்ச்மார்க் (benchmark) 13.92%தான் வருமானம் கொடுத்திருக்கிறது.
இந்த ஃபண்டில் ஆரம்பம் முதல் முதலீடு செய்திருந்தால் என்ன வருமானம் கிடைத்திருக்கும் என பார்ப்போம்.
உதாரணமாக இந்த ஃபண்ட்  தொடங்கப்பட்ட போது, அதில் 10,000 ரூபாய் ரூபாய் முதலீடு செய்திருந்தால் , அது 2017 ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி 7,33,898 ரூபாயாக பெருகி இருக்கும். இதே கால கட்டத்தில் இதன் பெஞ்ச்மார்க்  ஆன  எஸ்&பி பிஎஸ்இ 100 (S&P BSE 100)  5,60,545 ரூபாய்தான் வருமானம் கொடுத்திருக்கும். அதாவது கடந்த 31 வருடத்தில் இந்த ஃபண்ட்  73 மடங்கு வருமானத்தை கொடுத்திருக்கிறது.  யூடிஐ மாஸ்டர்ஷேர், குறைவான செலவு விகிதத்தில், அதிக தொகுப்பு நிதி (large corpus) மற்றும் குறைவான ஏற்ற இறக்கத்துடன், ரிஸ்க்-ஐ ஈடுகட்டி சிறப்பான வருமானத்தை (superior risk adjusted returns) முதலீட்டாளர்களுக்கு  அளித்து வருகிறது.  
யூடிஐ  ஏஎம்சி -ன் செயல் துணைத் தலைவர் மற்றும் ஃபண்ட் மேனேஜரான சுவாதி குல்கர்னி 
யூடிஐ  ஏஎம்சி -ன் செயல் துணைத் தலைவர் மற்றும் ஃபண்ட் மேனேஜரான சுவாதி குல்கர்னி (Ms. Swati Kulkarni, Executive Vice President and Fund Manager, UTI AMC)'' யூடிஐ மாஸ்டர்ஷேர்  ஃபண்டில், பெரும்பாலும் அதிக பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில், அதுவும் அதிக வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ள நிறுவனப் பங்குகளில்தான் முதலீடு செய்து வருகிறோம். அவ்வப்போது, காலத்திற்கு தகுந்தாற் போல சரியான துறைகள் மற்றும் பங்குகளை கண்டுபிடித்து, ஃபண்டின் போர்ட்ஃபோலியோவை மறுகட்டமைக்கவும் செய்து வருகிறோம்.   இந்த பெரிய நிறுவனங்கள் வலிமையானதாகவும் அதிக பண வரத்து உள்ளவைகளாகவும் உள்ளன. மேலும், சந்தையில் முன்னணியில் உள்ளன. யூடிஐ மாஸ்டர்ஷேர் சிறப்பான பரந்துபட்ட முதலீட்டுக் கலவையை (diversified portfolio) கொண்டிருக்கிறது. மேலும் எப்போதும் பங்கு தேர்வு என்பது மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அணுகு முறை, இந்த ஃபண்ட் மூலம் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்வதோடு, சந்தையின் அனைத்து நிலைகளிலும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க உதவியாக இருக்கிறது.
யூடிஐ மாஸ்டர்ஷேர் , நீண்ட காலத்தில் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து, நிலையான வளர்ச்சி அடைய வேண்டும் என்று விரும்புகிற முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது. அதேநேரத்தில் தொடர்ந்து டிவிடெண்ட் மற்றும் மூலதன பெருக்கத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்ததாக இருக்கும். யூடிஐ மாஸ்டர்ஷேர், ஒரு முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இடம் பெற வேண்டிய  ஒரு முக்கிய ஃபண்ட் ஆகும்.
               


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...