நடுத்தர மக்கள்
அவசியம் முதலீடு
செய்ய வேண்டிய
3 திட்டங்கள் இவைதான் -
முதலீட்டு ஆலோசகர் திரு. வ.நாகப்பன்
நிதி, முதலீட்டு, பங்குச் சந்தை ஆலோசகர் திரு. வ.நாகப்பன், '' இன்றைக்கு பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 95 சதவிகித இந்தியர்கள் முதலீடு செய்யவில்லை. அதற்கு காரணம், நேரமின்மை, முதலீட்டை முழுமையான புரிந்துக் கொள்ள திறன் இன்மை போன்றவை காரணங்களாக உள்ளன.
இப்போது ஃபிக்ஸட் டெபாசிட் - எஃப்டி மூலமான வருமானம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஐந்தாண்டு கால எஃப்டி வட்டி 7% அளவுக்கு குறைந்துவிட்டது.
அந்த வகையில், நடுத்தர மக்கள் தங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் போட வேண்டும்.
இந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் ரிஸ்க் இல்லை என்று சொல்ல முடியாது. பங்குச் சந்தையை விட குறைவான ரிஸ்க் இருக்கிறது.
சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வரும் நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்ந்தெடுத்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து வருவது அவசியம்.
ரிஸ்க் எடுக்கும் திறன், மனநிலை, மியூச்சுவல் ஃபண்ட் பற்றி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற ஃபண்ட்களை தேர்வு செய்வது அவசியம்.
நடுத்தர குடும்பத்தில் மாதம் தலா 1,000 ரூபாயை அதாவது ரூ.3,000-ஐ டைவர்சிபைட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், இண்டெக்ஸ் ஃபண்ட்களில் முதலீடு செய்து வர வேண்டும்.
டைவர்சிபைட் ஃபண்ட்களில் முதலீடு பல்வேறு பங்குகளில் பிரித்து செய்யப்படுவதால், ரிஸ்க் குறைகிறது.
பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீட்டின் ஒரு பகுதி, சுமார் 30% தொகை ஃபிக்ஸட் டெபாசிட், பாண்டுகளில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைகிறது.
இண்டெக்ஸ் ஃபண்ட்களில் முக்கிய பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவாக இருக்கும். மேலும், இந்த ஃபண்ட்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஓராண்டுக்கு பிறகு மூலதன ஆதாய வரி எதுவும் கிடையாது என்பது கூடுதல் சிறப்பு"
Thanks to Naanayam Vikatan

முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக