மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷு­ரன்ஸ் புதிய பங்கு வெளி­யீடு முதலீடு செய்யலாமா?

SBI LIFE  INSURANCE  IPO எஸ்.பி.ஐ லைப் இன்ஷு­ரன்ஸ் புதிய பங்கு வெளி­யீடு முதலீடு செய்யலாமா?

தனி­யார் துறை­யில், மிகப் பெரிய இன்ஷூ­ரன்ஸ் நிறு­வ­ன­மாக செயல்பட்டு வரும், எஸ்.பி.ஐ லைப் இன்ஷு­ரன்ஸ் (SBI LIFE  INSURANCE) நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீடு (IPO) இன்று செபடம்பர் 20, 2017  துவங்கி, செபடம்பர்22 ம் தேதி முடி­வ­டை­கிறது.

ஒரு பங்­கின் விலை பட்டை, 685 – 700 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. குறைந்­த­பட்­சம், 21 பங்­கு­கள் வீதம் முத­லீடு செய்­ய­லாம்.

ந்தப் ­பங்கு வெளி­யீட்­டின் மூலம், 8,400கோடி ரூபாய் திரட்­டப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எஸ்.பி.ஐ., மற்­றும் பி.என்.பி., பரி­பாஸ் கார்­டிப் நிறு­வ­னங்­களின் கூட்டு நிறு­வ­ன­மாக, எஸ்.பி.ஐ., லைப் இன்ஷு­ரன்ஸ் உள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் தகு­தி­யுள்ள பணி­யா­ளர்­க­ளுக்கு, பங்கு விலை­யில், 68 ரூபாய் தள்ளு­படி வழங்­கப்­ப­டு­கிறது.



எஸ்.பி.ஐ., லைப், 29 தனி காப்­பீட்டு திட்­டங்­கள் மற்­றும் 8 குழு காப்­பீட்டுதிட்­டங்­களை நிர்­வ­கித்து வரு­கிறது. இந்தத் ­திட்­டங்­கள், எஸ்.பி.ஐ., வங்­கி­யின் 24,000  கிளை­கள் மற்­றும் இதர வங்­கி­களின், 8,500 கிளை­கள் மூலம், வினி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்றன.


சமீ­பத்­திய, சில புதிய பங்கு வெளி­யீடு­கள் குறித்து, சாத­க­மற்ற கருத்­துக்­களை தெரி­வித்தசென்ட்­ரம் புரோக்­கிங் நிறு­வ­னம், ‘எஸ்.பி.ஐ., லைப் பங்­கு­களை வாங்­க­லாம்என பரிந்­து­ரைத்­துள்­ளது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...