யூடிஐ இன்கம் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
யூடிஐ இன்கம் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் (UTI Income Opportunities Fund), அதிக வருமானம் தரும் நிதி ஆவணங்கள் மற்றும் மூலதனத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் போர்ட்ஃபோலியோ மேலாண்மை மூலமாக முதலீட்டாளர்களுக்கு நியாயமான வருமானம் அளிக்க முயற்சி எடுத்து வருகிறது. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் 2 முதல் 4 ஆண்டுகள் முதிர்வை கொண்ட, அதிக வருமானம் அளிக்கும் நிதி ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. இது இடர்பாட்டை (risk) ஈடுகட்டி அதிக வருமானத்தை அளித்து வருகிறது.
யூடிஐ ஏஎம்சி நிறுவனத்தின் தலைவர் (ஃபிக்ஸட் இன்கம்) திரு. அமென்தீப் சோப்ரா (Mr. Amandeep Chopra, Head of Fixed Income, UTI AMC) கூறும் போது, '' ஆர்பிஐ அதன் அண்மை நிதிக் கொள்கை கூட்டத்தில், கடந்த சில மாதங்களாக பணவீக்கம் குறைந்ததால், வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்தது. பணவீக்கம் இதனை விட குறைய வாய்ப்பு இல்லை. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, காய்கனிகள் விலை அதிகரிப்பு, மாநில அரசு ஊழியர்களின் படிகள் அதிகரிப்பு போன்றவற்றால் குறுகிய காலத்தில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அந்த வகையில் இனி ஆர்பிஐ, சூழ்நிலையை அலசி ஆராய்ந்தே மேற்கொண்டு வட்டியை குறைக்கும் எனலாம். இது போன்ற சூழ்நிலையில், நடுத்தர காலத்தில் தங்களின் முதலீட்டுக்கு அதிக வருமானம் பெற முதலீட்டாளர்கள் யூடிஐ இன்கம் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்-ஐ கவனிக்கலாம்" என்றார்.
யூடிஐ ஏஎம்சி தலைவர் (ஃபிக்ஸட் இன்கம்) திரு. அமென்தீப் சோப்ரா |
இந்த ஃபண்ட், கடன் சார்ந்த திட்டங்கள் மூலம் முதலீட்டாளர் பேலன்ஸ்ட் போர்ட்ஃபோலியோ உருவாக்குவதில் ஒர் அங்கமாக இருக்கும். இந்த ஃபண்ட் வருமானத்தில் அதன் பெஞ்ச்மார்க் ஆன கிரைசில் காம்போசைட் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ்- ஐ விட அனைத்துக் காலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பம் முதல் (2017 ஜூன் 30) இந்த ஃபண்ட் 9.42% வருமானம் கொடுத்துள்ளது. இதன் பெஞ்ச் மார்க் வருமானம் 9.05% ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக