முதலீட்டு நோக்கில் சொத்து வாங்குவது குறைந்துள்ளது.
பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ரியல் எஸ்டேட் துறையில் மந்த நிலை - எல்ஐசி ஹெச்எஃப்எல் எம்டி விநய் ஷா
‘உங்கள் இல்லம் 2017’ என்கிற பெயரில் வீடு, மனை கண்காட்சி எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தினால் சென்னையில் நடத்தப்படுகிறது. 20-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியானது சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் ட்ரேட் சென்டரில், செப்டெம்பர் 15 முதல் 17 ம் தேதி வரை நடைபெறுகிறது.
உங்கள் இல்லம் 2017 கண்காட்சியை எல்ஐசி ஹெச்எஃப்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விநய் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும் போது, ‘’பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு ரியல் எஸ்டேட் துறையில் மந்த நிலை காணப்படுகிறது. விரைவில் இது மாறும்.,
முதலீட்டு நோக்கில் சொத்து வாங்குவது குறைந்துள்ளது. எங்கள் நிறுவனம் வழங்கும் சில்லறை கடனின் சராசரி அளவு ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சமாக அதிகரித்துள்ளது. இன்னும் சிறிது காலத்துக்கு வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு இல்லை.” என்றார்.
எல்ஐசி ஹெச்எஃப்எல் எம்டி விநய் ஷா |
இக்கண்காட்சியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது. எல்ஐசி ஹெச்எஃப்எல் அளிக்கும் கடனுதவிகளை ப்ராசஸிங் கட்டணம் இல்லாமல் பெறமுடியும்.
வட்டி 8.35%ல் இருந்து ஆரம்பிக்கிறது. முதன் முறையாக வீட்டுக் கடன் பெறுபவர்கள் ’பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா க்ரெடிட் லிங்க்ட் சப்ஸிடி ஸ்கீம்’ திட்டத்தின்கீழ் கூடுதல் பயன்களைப் பெற முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக