இனஃபோசிஸ் பங்குகள் பைபேக்: விற்பனை செய்ய ஆர்வமாக இருக்கும்என்.ஆர்.நாராயண மூர்த்தி, நந்தன் நிலகேனி
முன்னணி இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ரூ. 13,000 கோடிக்கு, அதன் பங்குகளை பங்கு ஒன்று ரூ.1,150க்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. இந்த நிலையில் அதன் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த திரு. விஷால் சிக்கால் பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் பங்கின் விலை இறக்கம் கண்டது.
இந்நிலையில் அதன் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி இன்ஃபோசிஸ் நிர்வாகம் சாராத சேர்மனாகி இருக்கிறார். இதனல், பங்கின் விலை இறக்கத்தில் இருந்து மீண்டு உள்ளது.
தற்போதையை நிலையில் சந்தை விலை ரூ. 900க்கு கீழ் இறங்கி இருக்கிறது. ரூ.1 ,150 நல்ல விலை என்பதால் இன்ஃபோசிஸ் நிறுவனர்கள் (புரமோட்டர்கள்) அவர்கள் வசம் இருக்கும் ரூ.2,050 கோடி பங்குகளை விற்க தயராக இருக்கிறார்கள்.
இதில், என்.ஆர்.நாராயண மூர்த்தி, நந்தன் நிலகேனியும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்ஃபோசிஸ் பங்குகளில் இனியும் முதலீடு செய்வது அவ்வளவு லாபகரமாக இருக்காது என்கிறார்கள், பகுபாய்வாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக