மொத்தப் பக்கக்காட்சிகள்

வீட்டுக் கடன் : ஸ்டெப் அப் லோன் லாபகரமானதா? வாங்கலாமா?

வீட்டுக் கடன் : கூடுதல் கடன் தொகை பெற ஸ்டெப் அப் லோன்

+ நிதி சாணக்கியன்

வங்கிகள்  மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் (Housing Finance Companies) வீட்டு கடன் அளிக்கும்போது மாத சம்பளம் மற்றும்  இதர வருமானங்களை கணக்கில்  கொண்டு கடன் தருகின்றன.

வழக்கமாக பெறக்கூடிய கடன் அளவை விடவும் சற்று கூடுதலாக கடன் தேவைப்படும்  நேரங்களில் ஸ்டெப் அப் லோன் (Step up loan) என்கிற வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டு கடன்  வாங்குபவரின் எதிர்கால வருமானம் மற்றும் வருமானம் அதிகரிக்கும் சூழல்  ஆகியவற்றை கணக்கில் கொண்டு, கடன் தொகை அதிகரித்து தரப்படும் முறை ஸ்டெப் அப் லோன்.

இந்த முறையில் மூலம் ஒருவரது கடன் தகுதி நிலையை 5% முதல் 25% வரை உயர்த்திக் கொள்ள முடியும். தொழில் மற்றும் பணியின் அடிப்படையில் எதிர்காலத்தில் பெறக்கூடிய ஊதியம்  /  வருமானத்தை கணக்கில் கொண்டு இதைச்செய்யலாம்.

மாத தவணை

இந்த வீட்டு கடன் திட்டத்தில் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுவதோடு, வீட்டுக் கடன் திட்டத்தில் கடனை பல்வேறு தவணைகளாக பிரித்து வைத்திருப்பார்கள். இதனால், வீட்டு கடனுக்கான ஆரம்ப கால மாத தவணை குறைவாக இருக்கும். காலம் செல்லச் செல்ல தவணைத் தொகை அதிகரிக்கும்.

ஒவ்வொரு வருடமும் தனி நபரின் ஊதியம்  /  வருமானம் உயரும் என்கிற அடிப்படையில், கடனை திரும்ப செலுத்துவதற்கான திறனும் அதிகரிக்கும். கடனை முடிக்கும் காலத்தில், வீட்டு கடனுக்கான மொத்த வட்டியும் வசூலிக்கப்பட்டிருக்கும்.  அதேநேரத்தில் வழக்கமான கடனை விட கூடுதல் வட்டி செலுத்தி இருப்பீர்கள். பார்க்க அட்டவணை



இளைஞர்களின் தேவையை கருத்தில் கொண்டு வீடுகளை வாங்குவதற்காக வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள்  ஸ்டெப் அப் லோனை வழங்குகின்றன.

எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கும் கூடிய துறையில், நல்ல தகுதியுடன் பணி புரிந்து வருபவர்களுக்கு ஸ்டெப் அப்  லோன்

பல்வேறு தனியார் வங்கிகள்  ஸ்டெப்அப் வீட்டுக் கடனை வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகள் முழுமையான ஸ்டெப் அப் வீட்டு கடன் தருவதில்லை என்றாலும், ஸ்டெப் அப் முறையில் கடனை திரும்ப செலுத்தும் (ஸ்டெப் அப் ரி-பேமெண்டு ஃபெசிலிடி) முறையில் கடன்களை வழங்குகின்றன. இந்த முறையில் மாத தவணை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...