வட்டி விகித ஏற்ற இறக்கத்திலும் வருமானம் தரும் டைனமிக் பாண்ட் ஃபண்ட்
யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் (UTI Dynamic Bond Fund) அனைத்து காலத்துக்கும் ஏற்ற நெகிழ்ச்சி தன்மையுடன் கூடிய மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவை (portfolio) வட்டி விகித ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதாவது வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில், முதலீட்டு ஆவணங்களின் முதிர்வு காலம் குறைக்கப்படும்.
இதன் மூலம் மூலதனம் பாதுகாக்கப்படுகிறது. வட்டி விகிதம் குறையும் போது, ஒரு இன்கம் ஃபண்ட்-ன் மூலம் கிடைக்கும் கவர்ச்சிகரமான வருமானம் இந்த ஃபண்டின் மூலம் கிடைப்பதாக இருக்கிறது.
திரு. அமன்தீப் சோப்ரா, ஹெட் - ஃபிக்ஸட் இன்கம், யூ.டிஐ ஏஎம்சி (Mr. Amandeep Chopra, Head of Fixed Income, UTI AMC) கூறும் போது,'' தற்போது நம்மைச் சுற்றி ஓர் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. தற்போது பண வீக்க விகிதம் குறைந்து காணப்படுகிறது. அது அதிகரிக்கும்பட்சத்தில் கவலை அளிப்பதாக இருக்கும்.
அக்டோபரில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என நாங்கள் நினைக்கவில்லை. அதேநேரத்தில், மற்றொரு வட்டி விகித குறைப்பு நடக்காது என நாங்கள் சொல்லவில்லை. அப்படி நடந்தால் அது மிகவும் சிக்கலான நிகழ்வாகும். உலக அளவில், மத்திய வங்கிகள் வட்டி விகித அதிகரிப்பை மேற்கொள்ள விரும்புகின்றன. இந்தியாவில், பண மதிப்பு நீக்கம் (Demonetization) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமலாக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் விளைவுகளை இப்போதும் கவனித்து வருகிறோம். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை, இந்தக் கூடுதல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமையக் கூடும். அக்டோபருக்கு பிறகு, இந்த விஷயத்தில் மேலும் தெளிவு கிடைக்க கூடும்.
செப்டம்பர் மாத ஃபெட் கொள்கை (Fed policy) நெருக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது காத்திருந்து, கவனிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். இந்தச் சூழலில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இந்த வருமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும், குறிப்பாக யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் போன்றவை முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்." என்றார்.
முதலீட்டாளர் ஒருவரின் சமச்சீர் முதலீட்டுக் கலவையில் (balanced portfolio) கடன் சார்ந்த சொத்து பகிர்வின் (debt allocation) ஒரு பகுதியாக யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் இருக்க கூடும். இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் ஆன கிரிசில் காம்போசிட் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ் (CRISIL Composite Bond Fund Index) - ஐ விட அனைத்து கால அளவுகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 2017, ஜூன் 30 ம் தேதி நிலவரப்படி, ஆரம்பம் முதல், இந்த ஃபண்ட் 10.13% வருமானம் கொடுத்துள்ளது. இதே கால கட்டத்தில் இதன் பெஞ்ச் மார்க் கொடுத்திருக்கும் வருமானம் 8.72% ஆக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக