எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
பொது பங்கு வெளியீடு - 2017 செப்டம்பர் 20, புதன் கிழமை ஆரம்பம், 2017 செப்டம்பர் 22, வெள்ளிக் கிழமை நிறைவு.
பங்கு விலைப் பட்டை ரூ. 685- ரூ.700
எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் {SBI Life Insurance Company Limited} –ன் பொதுபங்கு வெளியீடு 2017 செப்டம்பர்20, புதன் கிழமை ஆரம்பிக்கிறது. ₹. 10 முக மதிப்பு (face value) கொண்ட 12,00,00,000 (12 கோடி) சம பங்குகள் (Equity Shares) விற்பனை செய்யப்படுகிறது. இதில், 8,00,00,000 சம பங்குகள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவால் (State Bank / or the Promoter Selling Shareholder) மற்றும் 4,00,00,000 (4 கோடி) சம பங்குகள் பிஎன்பி பரிபா கார்டிஃப் எஸ்.ஏ ( BNP Paribas Cardif S.A.) நிறுவனத்தால் மற்றும் நிறுவனர்களின் பங்கு மூலதனத்திலிருந்து (Promoter Selling Shareholder) விற்பனை செய்யப்படுகிறது. இதில், தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 20,00,000 சம பங்குகளும் அடங்கும்.
பங்கு விலைப்பட்டை ரூ. 685 முதல் ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு, விற்பனை விலையிலிருந்து பங்கு ஒன்றுக்கு ரூ. 68 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 21 பங்குகளுக்குவிண்ணப்பிக்க வேண்டும். அதற்குமேல் தேவைப்பட்டால் 21-களின்மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். 2017 செப்டம்பர்22, வெள்ளிக் கிழமை பங்குவிற்பனை நிறைவு பெறுகிறது.
பங்கு ஏலம் ஆரம்பிக்கும் நாளுக்கு, ஒருநாள் முன்னதாக ஆங்கர்முதலீட்டாளர்கள் (Anchor Investors), ஏலம்கேட்க ஆரம்பிக்கலாம்.
இந்தப் பங்கு வெளியீட்டின் முன்னணி மேலாளர்களாக (Lead Managers) ஜேஎம் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட், ஆக்ஸிட் கேப்பிட்டல் லிமிடெட், பிஎன்பி பரிபா, சிட்டிகுரூப் குளோபல் மார்கெட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், டச் (Deutsche) ஈக்விட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட், கோட்டக் மஹிந்திரா கம்பெனி லிமிடெட் மற்றும் எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் லிமிடெட் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிறுவனத்தின்சம பங்குகள், மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்இ) மற்றும்தேசிய பங்குச் சந்தை(என்எஸ்இ) களில் பட்டியலிடப்படும்.
தகுதி வாய்ந்த நிறுவனமுதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyers-QIBs) 50 சதவிகிதத்துக்கு அதிகம் இல்லாமல்பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பங்கு வெளியீட்டின் முன்னணி மேலாளர்களின் ஆலோசனையில் பேரில், இதில் 60 சதவிகிதம் ஆங்கர்முதலீட்டாளர்களுக்கும், சுமார் 33 சதவிகிதம்மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும்ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நிகர பங்கு விற்பனையில்நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு(Non-Institutional Investors), 15 சதவிகிதத்திற்கு குறையாமல்பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. நிகர பங்கு விற்பனையில்நிறுவனம் சிறுமுதலீட்டாளர்களுக்கு (Retail Individual Bidders), 35 சதவிகிதத்திற்கு குறையாமல் பங்குகள்ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அஸ்பா (ASBA - Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகள்விற்பனை செய்யப்படும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமேமுதலீட்டாளர்களின் வங்கிகணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை,வங்கி கணக்கில் முடக்கி(Blocked) வைக்கப்பட்டிருக்கும். இந்த வசதியைதங்களின் வங்கி மூலம்அனைத்து முதலீட்டாளர்களும் (ஆங்கர்முதலீட்டாளர்கள் தவிர) பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக