மொத்தப் பக்கக்காட்சிகள்

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - அடிப்படை மந்திரம்

Timing the Market  Vs SIP

டைமிங் த மார்க்கெட் வெர்சஸ் எஸ்ஐபி

பங்குச் சந்தை,  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - அடிப்படை மந்திரம்

திரு. வ.நாகப்பன், 
முதலீட்டு ஆலோசகர், சென்னை

பங்குச் சந்தையில் வெற்றிபெறச் சொல்லப்படும் அடிப்படை சூத்திரம்

‘அடிமட்ட விலையில் பங்குகளை வாங்குங்கள்... உச்ச விலையில் விற்றுவிடுங்கள்’ 

இதுதான் ஃபார்முலா.  சொல்வது எளிது.

ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு இது சாத்தியம்?

இதுதான் குறைந்தபட்ச விலை, இதற்குக் கீழ் இந்தப் பங்குகளின் விலை இறங்கவே இறங்காது என்றோ, இதுதான் உச்ச விலை, இதற்கு மேல் ஏறவே ஏறாது என்றோ யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது.

அப்படிக் காத்திருந்து நல்ல நேரம் பார்த்து வாங்குவதற்கும் விற்பதற்கும் ‘டைமிங் த மார்க்கெட்’ (Timing the Market) என்று பெயர்.


நன்கு தேர்ந்த வல்லுநர்களுக்கே கண்ணைக் கட்டும் வித்தை இது!
ஆனால், எஸ்.ஐ.பி - சிஸ்டமேட்டிங் இன்வெஸ்ட் பிளான் மூலமாக சாமானியர்கள்கூட இந்தச் சூத்திரத்தைச் சாதிக்கமுடியும். இதில் உள்ள சிக்கலான விஷயம், நல்ல முதலீட்டுத் திட்டத்தை (மியூச்சுவல் ஃபண்ட்கள், பங்குகள்) தேர்ந்தெடுப்பது மட்டும்தான்.

அதை ஒழுங்காகச் செய்துவிட்டால், மற்றதைத் தானே பார்த்துக்கொள்ளும் முதலீட்டு முறைதான் எஸ்ஐபி.
திரு. வ.நாகப்பன்

நல்ல மியூச்சுவல் ஃபண்ட் , நல்ல பங்கு விலை ஏற்ற இறக்கத்தை சமாளிக்கத்தான் இது உதவும்; தவறான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், எஸ்.ஐ.பி முறையால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையை ஃபண்ட் நிறுவனங்களே அளிக்கின்றன. ஆனால், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்தான் மாதம் குறிப்பிட்ட தேதியில் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...