செக்யூரிட்டி அண்ட் இன்டிலிஜென்ஸ் சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் – புதிய பங்கு வெளியீடு திங்கள் கிழமை, ஜூலை 31, 2017 அன்று ஆரம்பம், புதன் கிழமை ஆகஸ்ட் 2, 2017 அன்று நிறைவு
விலைப்பட்டை: ரூ. 805 முதல் ரூ. 815, ரூ. 10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு
ஆரம்ப விலை, முகமதிப்பை போல் 80.5 மடங்குகள், இறுதி விலை முகமதிப்பை போல் 81.5 மடங்குகள்.
சென்னை, ஜூலை 27, 2017 : செக்யூரிட்டி அண்ட் இன்டிலிஜென்ஸ் சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் {(Security And Intelligence Services (India) Limited ("Company" or "Issuer")} நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (Initial Public Offering - IPO) 2017 ஜூலை 31, திங்கள் கிழமை அன்று ஆரம்பமாகிறது. பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ. 10.
ரூ. 10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலைப்பட்டை (Price Band) ரூ. 805 முதல் ரூ. 815 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 18 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் 18-ன் மடங்கில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பங்கு விற்பனை 2017 ஆகஸ்ட் 2 புதன் கிழமை அன்று நிறைவு பெறுகிறது.
பங்கு விற்பனை ஏல முறையில் (Book Building Process) நடக்கிறது. விற்பனைக்குள்ள மொத்தப் பங்குகளில் குறைந்தபட்சம் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு {Qualified Institutional Buyers - QIBs} விகிதாச்சார அடிப்படைவில் 75 சதவிகித பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் மூன்று ஒரு பகுதி பங்குகள் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு (Non Institutional Bidders) 15 சதவிகிதத்துக்கு அதிகம் இல்லாமல் பங்குகள் ஒதுக்கப்படுகின்றன. தனிப்பட்ட சிறு முதலீட்டாளர்களுக்கு 10 சதவிகிதத்துக்கு அதிகம் இல்லாமல் பங்குகள் ஒதுக்கப்படுகின்றன.
அஸ்பா (ASBA - Applications Supported by Blocked Amount) முறைகள் பங்குகள் விற்பனை செய்யப்படும். இம்முறைகள் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும். .
நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் (Authorised Share Capital) ரூ. 1,350,000,000 ஆகவும் ரூ. 10 முகமதிப்பு கொண்ட 135,000,000 சம பங்குகளாகவும் உள்ளது. வெளியிடப்படும் பங்குகளின் மூலதனம் (Issued and Subscribed Share Capital) ரூ. 687,143,750 ஆகவும் ரூ. 10 முகமதிப்பு கொண்ட 68,714,375 சம பங்குகளாகவும் உள்ளன. நிறுவனத்தின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் (Paid Up Share Capital) ரூ. 687,142,500 ஆகவும் ரூ. 10 முகமதிப்பு கொண்ட68,714,250 சம பங்குகளாகவும் உள்ளன.
இந்தப் பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.